ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானிக்கு சிறந்த மனிதாபிமானி (Humanitarian Award) விருதை வழங்கி மிஸ் வேர்ல்ட் அறக்கட்டளை கவுரவித்துள்ளது. சர்வதேச அளவில் பல விருதுகளை நீடா அம்பானி குவித்து வரும் நிலையில் மற்றொரு முக்கிய நிறுவனம் அவருக்கு மனிதாபிமானிக்கான விருதை வழங்கியுள்ளது.
இதையொட்டி மும்பையின் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற விழாவில் மிஸ் வேர்ல்ட் அறக்கட்டளையின் தலைவர் ஜூலியா மோர்லி, நீடா அம்பானிக்கு விருதை வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய அவர், நீடா அம்பானி இரக்கத்திற்காக உலகம் முழுவதும் அறியப்பட்டவராக இருக்கிறார். அவரது செயல்பாடுகள் பாராட்டுதலுக்கு உரியது என்று தெரிவித்தார்.
விருதை பெற்றுக் கொண்டு நீடா அம்பானி பேசுகையில், இந்த விருது என்பது தனி நபரின் சாதனைக்காக கிடைத்தது அல்ல. கருணையும், இரக்கமும் கொண்ட ஒவ்வொருவரின் சேவைக்கு கிடைத்த விருதாக இதை கருதுகிறேன். சத்யம், சிவம், சுந்தரம் என்ற கொள்கைகளையே நான் கடைபிடித்து வருகிறேன். இது உண்மை, நன்மை மற்றும் அழகு என்பதை குறிக்க்கிறது.
சத்யம் என்றால் உண்மை. அதனை தூய்மை, நேர்மை பின்தொடரும். சிவம் என்பது உள்ளத்தில் ஆன்மிகத்தை வளர்க்கிறது. எங்களது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலம் கோடிக்கணக்கான குழந்தைகளின் சிரிப்பிலும் தெய்வீகத்தை அனுபவித்திருக்கிறேன்.
சுந்தரம் என்பது நம்மை சூழ்ந்திருக்கும் அழகை கொண்டாடுவதை குறிக்கும். ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் மகிழ்ச்சியை கண்டறிந்து உங்கள் இதயத்தை நன்றி உணர்வு மற்றும் பாராட்டுகளால் நிரப்புங்கள். நேர்மறையான மாற்றத்திற்கான சக்தியாக அந்த சுந்தரம் எனும் அழகை பயன்படுத்துங்கள்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையில், ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு கல்வி, சுகாதாரம், விளையாட்டு, வாழ்வாதாரம் மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் முயற்சி செய்கிறோம் என்று பேசினார். நீடா அம்பானியின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் பாராட்டுகள் குவிந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…