• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நீங்க BNPL சேவையை பயன்படுத்துறீங்களா..? அப்ப இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
நீங்க BNPL சேவையை பயன்படுத்துறீங்களா..? அப்ப இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


BNPL என்பது பை நவ் பே லேட்டர் (Buy Now, Pay Later). நீங்கள் வாங்கும் பொருளுக்கான விலையை முன்கூட்டியே செலுத்துவதற்கு பதிலாக அதனை இன்ஸ்டால்மென்ட்களாக பிரித்து தரும் இந்த பேமெண்ட் ஆப்ஷன் இந்தியாவில் தற்போது அதிக அளவில் பிரபலமாகி வருகிறது.

வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை உடனடியாக பெற்றுக்கொண்டு அதற்கான விலையை எந்த ஒரு வட்டியும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால அளவில் செலுத்துவதற்கு இந்த ஆப்ஷன் அனுமதிக்கிறது. வழக்கமான கிரெடிட் கார்டுகள் மற்றும் லோன்களுக்கு மாற்றீடாக இந்த பேமெண்ட் முறை பயன்படுத்தப்படுகிறது.

விளம்பரம்

BNPL சேவைகள் வழக்கமாக விரைவான மற்றும் எளிமையான அங்கீகார செயல்முறைகளை வழங்குகிறது. மேலும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது. ஆயினும் இந்த பேமெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தும் பொழுது நீங்கள் பேமெண்ட் செலுத்த தவறிவிட்டால் விளையும் கட்டணங்கள் மற்றும் அதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் ஏற்படும் தாக்கம் போன்றவை பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

பட்ஜெட்:

BNPL சௌகரியமான முறையாக இருந்தாலும் அதுவும் ஒரு கடன்தான் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய பட்ஜெட்டில் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாத வகையில் வட்டி இல்லாத கால அளவுக்குள்ளாக இந்த தொகையை உங்களால் செலுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

விளம்பரம்

இதையும் படிங்க : பாலிசி விகிதங்களை குறைத்த ரிசர்வ் வங்கி… பிரபல வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு!

இலவசம் :

வட்டி இல்லாத பேமெண்ட் ஆப்ஷன் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஒரு பேமெண்டை நீங்கள் செலுத்த தவறினால் கூட அதற்கான அபராதங்களை நீங்கள் செலுத்த வேண்டும், அதுவும் அதிக வட்டி விகிதங்களில். அபராத தொகைகள் மற்றும் ப்ரீபேமெண்ட் கட்டுப்பாடுகள் குறித்து புரிந்து கொள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.

கிரெடிட் ஸ்கோரில் ஏற்படும் தாக்கம்:

விளம்பரம்

ஒரு சில BNPL வழங்குனர்கள் கிரெடிட் பியூரியாக்களிடம் புகார் செய்வது வழக்கம், ஆனால் இது இந்தியா முழுவதும் பின்பற்றப்படவில்லை. சரியான முறையில் நீங்கள் பேமெண்ட்களை செலுத்தி விட்டால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

மறைமுக கட்டணங்கள்: உங்களுடைய கிரெடிட் அளவை விட அதிகமான தொகைக்கு நீங்கள் பொருட்களை வாங்கும் பொழுது ஒரு சில BNPL சேவைகள் அதற்கான ப்ராசசிங் கட்டணங்களை வசூல் செய்யலாம். இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து செலவுகளையும் கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள். தாமதமாக பேமெண்ட் செலுத்துவதற்கான கட்டணங்கள், ப்ராசசிங் கட்டணங்கள், அபராதங்கள் அல்லது முன்கூட்டிய பேமெண்ட்களுக்கான கட்டணங்கள் போன்ற மறைமுக கட்டணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

விளம்பரம்

இதையும் படிங்க : பெண்களுக்கு ரூ.3 லட்சம் பணம்.. மத்திய அரசின் அசத்தல் கடன் திட்டம்.. முழு விவரம் இதோ!

வரம்புக்கு உட்பட்ட பயன்பாடு:

BNPL சேவைகள் எல்லா இடத்திலும் கிடைப்பது இல்லை. கிரெடிட் கார்டுகளைப் போல, BNPL சேவையை எல்லா வியாபாரிகள் அல்லது தளங்களிலும் பயன்படுத்த முடியாது.

கடன் வலை:

BNPL சேவையை நீங்கள் ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நிச்சயமாக கடன் வலையில் மாட்டிக் கொள்வீர்கள். எனவே அளவுக்கு அதிகமாக இந்த சேவையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பொருட்களை வாங்க இந்த சேவையை பயன்படுத்த வேண்டாம்.

விளம்பரம்

விதிகளை புரிந்து கொள்ளுதல்:

அனைத்து BNPL ஆப்ஷன்களும் ஒன்றல்ல. வட்டி இல்லாத கால அளவு மற்றும் தாமத கட்டணங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடலாம். ஆகவே BNPL சேவையை பயன்படுத்துவதற்கு முன்பு அதன் விதிகள் மற்றும் நிபந்தனைகளை முழுவதுமாக புரிந்து கொள்ளவும்.

செலவுகளை கண்காணித்தல்:

BNPL ட்ரான்சாக்ஷன்கள் பல்வேறு BNPL வழங்குனர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம்கள் இடையே பிரிக்கப்படலாம். எனவே மொத்தமாக நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதற்கான கணக்கை தவற விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

.

Read More

Previous Post

“புதிய கண்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி; முடிவில் மாற்றம் இல்லை” – சச்சின் ட்வீட் | India Pakistan match in New Continent No change in result Sachin tweet

Next Post

சுகாதார நிதி சீர்திருத்தத் திட்டத்தை MOH அறிவிக்க உள்ளது – துல்கேப்ளி – Malaysiakini

Next Post
சுகாதார நிதி சீர்திருத்தத் திட்டத்தை MOH அறிவிக்க உள்ளது – துல்கேப்ளி – Malaysiakini

சுகாதார நிதி சீர்திருத்தத் திட்டத்தை MOH அறிவிக்க உள்ளது – துல்கேப்ளி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin