டாக்டர் ராமதாஸ் சொன்னது என்ன?
விழுப்புரம் மாவட்டத்தில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பொறுப்பை மீண்டும் தானே ஏற்பதாக அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சியின் புதிய தலைமுறையினர் தனது தலைமையின் கீழ் சிறிது காலம் பணியாற்ற வேண்டும் என்ற அன்பு கட்டளையை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதற்காக, கட்சி அமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முடிவுக்கான காரணம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு “காரணங்கள் பல உண்டு, அதை உங்களிடம் பகிர முடியாது” என வேதனை உடன் ராமதாஸ் பதில் அளித்தார். சிறுக சிறுக அதை பகிர்ந்து கொள்வேன் என்றும் அவர் கூறினார். மேலும் கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் நிர்வாகிகளிடம் பேசி முடிவு செய்வோம் என்றும் ராமதாஸ் கூறினார்.

