Last Updated:
நீங்கள் ஒரு SBI வாடிக்கையாளர் மற்றும் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்தும் ரூ.236 சமீபத்தில் கழிக்கப்பட்டிருந்தால் ஏதோ ஒரு மோசடி நடந்துள்ளது அல்லது தவறுதலாக பணம் பிடிக்கப்பட்டுள்ளது என்று பீதியடைய வேண்டாம்.
சமீபத்தில் பல ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்கள் தங்கள் சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களில் இருந்து ரூ.236 பணம் திடீரென பிடிக்கப்பட்டதால் குழப்பமடைந்தனர். நீங்கள் ஒரு SBI வாடிக்கையாளர் மற்றும் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்தும் ரூ.236 சமீபத்தில் கழிக்கப்பட்டிருந்தால் ஏதோ ஒரு மோசடி நடந்துள்ளது அல்லது தவறுதலாக பணம் பிடிக்கப்பட்டுள்ளது என்று பீதியடைய வேண்டாம்.
ஏனென்றால், இப்படி பிடிக்கப்பட்டுள்ள பணம் உங்கள் SBI டெபிட் கார்டின் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்திற்கானது (AMC) என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டும், எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களின் டெபிட் கார்டுகளைப் பராமரிப்பதற்காக ஒரு சிறிய கட்டணத்தை வங்கி வசூலிக்கிறது. வழக்கமான கிளாசிக், சில்வர், குளோபல் அல்லது காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு 18% ஜிஎஸ்டி உடன் சேர்ந்து வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் (AMC) ரூ.200 + ரூ.36 (GST) என மொத்தம் ரூ.236 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த AMC தொகை வருடத்திற்கு ஒருமுறை தானாகவே வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் செய்யப்படும்.
அதேநேரம் கோல்ட், பிளாட்டினம் அல்லது பிசினஸ் டெபிட் கார்டுகள் போன்ற பிரீமியம் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த AMC கட்டணம் சற்று அதிகமாக இருக்கும், வரிகளின்றியே ரூ.250 முதல் ரூ.350 வரை கட்டணம் இருக்கும். சரியான தொகை குறிப்பிட்ட அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட கார்டின் வகையைப் பொறுத்தது.
நீங்கள் இப்போதுதான் AMC பிடித்ததை பார்க்கும் வாடிக்கையாளர் என்றால் உங்கள் கார்டு கடந்த ஆண்டுதான் வாங்கப்பட்ட புதிய ஒன்றாக இருந்ததாலோ அல்லது முன்பு உங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாலோ இருக்கலாம். சில வாடிக்கையாளர்கள் தங்கள் அக்கவுண்ட் ஸ்டேட்மென்டில் “டெபிட் கார்டு வருடாந்திர பராமரிப்பு கட்டணம்” அல்லது “கார்டு AMC” என்று இருப்பதை சில நேரங்களில் கவனிக்க தவறிவிடுகின்றனர்.
AMC கட்டணம் பிடிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த, உங்கள் சமீபத்திய பரிவர்த்தனை வரலாற்றை SBI YONO ஆப், இன்டர்நெட் பேங்கிங் சர்விஸ் அல்லது உங்கள் பிரான்ச் பாஸ்புக் மூலம் சரிபார்க்கலாம். இப்படி பார்க்கும்போது என்ட்ரியில் “டெபிட் கார்டு AMC” அல்லது “ஆண்டு பராமரிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அது சட்டப்பூர்வமானது.
எனினும், உங்களிடம் தவறாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால் உதாரணமாக, உங்கள் அக்கவுண்ட் டைப்பிற்கு பொதுவாக டெபிட் கார்டு பராமரிப்பு இலவசம் என்று கூறப்பட்டிருந்தால் நீங்கள் உடனடியாக SBI வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது தெளிவுபடுத்த உங்கள் அக்கவுண்ட் இருக்கும் வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்லலாம்.
எதிர்காலத்தில் பணப்பிடித்தங்களைத் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் சேலரி பேக்கேஜ் அல்லது டிஜிட்டல் ஒன்லி அக்கவுண்ட்ஸ்களுக்கு மாறலாம். இது சில நேரங்களில் ஜீரோ வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்களை வழங்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் SBI கணக்கிலிருந்து ரூ.236 கழிக்கப்படுவது வருடாந்திர பராமரிப்பு கட்டணம் மற்றும் GST சேர்ந்தது ஆகும். இது உங்கள் டெபிட் கார்டை செயலில் வைத்திருப்பதற்கான வழக்கமான கட்டணம்.
October 28, 2025 6:42 PM IST
நீங்கள் SBI வாடிக்கையாளரா…? சமீபத்தில் உங்கள் அக்கவுன்ட்டில் ரூ.236 பிடிக்கப்பட்டதா…? காரணம் என்ன தெரியுமா…?


