Last Updated:
ஒரு சராசரி ஊழியர் புதிய ஒரு வேலை வாய்ப்பை ஏற்று, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது அந்த பிஎஃப் அக்கவுண்டை மாற்றும்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
பல வருடங்களாக கோடிக்கணக்கான இந்திய ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் தங்களுடைய வாழ்க்கையின் பொன்னான வருடங்களான பணி ஓய்வு காலத்திற்கான பொருளாதார பாதுகாப்பாக எம்பிளாயிஸ் பிராவிடண்ட் ஃபண்டை ஒரு நம்பகமான கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 12 சதவீத பிடிப்பு, அதிக வட்டி விகிதம் (2024 – 25 நிதியாண்டிற்கு 8.25 சதவீதம்), அரசு ஆதரவு மற்றும் வரி விலக்கு போன்ற காரணங்களால் EPF என்பது ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
ஆனால் எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்டில் உள்ள பணத்தை வித்டிரா செய்வதற்கு அல்லது டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு என்று வரும்போது அதில் இருக்கக்கூடிய செயல்முறை காரணமாக பலருக்கு அது சிக்கல் நிறைந்த ஒன்றாக மாறுகிறது. EPF வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையின் படி, 2023-24 நிதியாண்டில் மட்டும் வித்டிராயல் டிரான்ஸ்ஃபர் மற்றும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட 25% மேற்பட்ட கிளைம்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் EPF அக்கவுண்ட்டை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான கிளைம்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஒரு சராசரி ஊழியர் புதிய ஒரு வேலை வாய்ப்பை ஏற்று, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது EPF அக்கவுண்ட்டை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான சவால்கள் குறித்து எந்த ஒரு முன்னேற்பாடும் செய்வது கிடையாது. உதாரணமாக 24 வயதான பெங்களூருவை சேர்ந்த ஒரு சாஃப்ட்வேர் ஊழியர் அன்வே திருப்பதி 2023 ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பணிமாற்றமானார்.
இவருடைய EPF அக்கவுண்ட் மாற்றம் செய்வதற்கான கோரிக்கை தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்துள்ளது. விசாரித்த பிறகு இவருடைய முந்தைய நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு பிழை காரணமாக இவர் சமர்ப்பித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரியவந்தது. செப்டம்பர் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேருபவர்களின் அடிப்படை மாத சம்பளம் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தால் அவர்கள் பென்ஷன் திட்டத்தின் கீழ் பென்ஷன் பெறுவதற்கு தகுதி பெற மாட்டார்கள். எனினும் அவருடைய நிறுவனம் தொடர்ந்து EPF பங்களிப்பை பிடித்தம் செய்து வந்திருக்கிறது.
இதனால் திருப்பதியின் மாத சம்பளம் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக காட்டப்பட்டிருக்கிறது. ஊழியர் சம்பந்தப்பட்ட தகவல்களை தவறாக கொடுப்பது மற்றொரு முக்கியமான காரணம். பெயர், பிறந்த தேதி அல்லது ஆதார் விவரங்கள் போன்றவை பழைய மற்றும் புதிய நிறுவனத்தில் ஒரே மாதிரியாக உள்ளிடப்பட்டிருக்க வேண்டும் இதில் ஏதேனும் மாற்றம் இருக்கும் பட்சத்தில் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான கோரிக்கை உடனடியாக நிராகரிக்கப்படும்.
மேலும் பல்வேறு UAN நம்பர் வைத்திருப்பது காரணமாகவும் டிரான்ஸ்ஃபர் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். ஏற்கனவே இருக்கும் UAN -ஐ பயன்படுத்தாமல் புதிய நிறுவனத்தில் சேர்ந்தவுடன் புதிய UAN -ஐ ஒரு சில நிறுவனங்கள் உருவாக்குகின்றனர். வழக்கமான முறையில் உங்களுடைய சேவைக்கால வரலாற்றை EPFO மெம்பர் போர்ட்டலில் கண்காணிப்பது அவசியம். இதன் மூலமாக சரியான நேரத்தில் பிழைகளை உங்களால் கண்டுபிடிக்க முடியும். மேலும் நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய தேதி, டிரான்ஸ்ஃபர் செய்வதற்காக நீங்கள் கொடுக்கும் தேதிக்கு முன்னதாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
EPFO 3.0 மூலமாக தொழிலாளர் அமைச்சகம் 5 லட்ச ரூபாய் வரையிலான குறைந்த மதிப்பு கொண்ட கிளைம்களுக்கு ஆட்டோ செட்டில்மெண்ட், ATM, UPI வித்டிராயல்கள் மற்றும் அடிப்படை விவரங்களுக்கு OTP அடிப்படையிலான அப்டேட்டுகள் போன்ற வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. கூடிய விரைவில் இந்த அப்டேட் பயன்படுத்துவதற்கு கிடைக்கும் என்று நம்பலாம். எனினும் அதே சமயத்தில் EPFO அனைத்து விதமான செயல்முறைகளும் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புகார்கள் முன்னுரிமையின் பெயரில் தீர்க்கப்பட வேண்டும். ஏனெனில் கோடி கணக்கான ஊழியர்கள் தங்களுடைய ஓய்வுகால சேமிப்புகளை நம்பி இருக்கும் போது இந்த செயல்முறைகளில் ஏற்படும் தாமதம் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
August 31, 2025 1:05 PM IST


