• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நீங்கள் யூபிஐ மூலம் பணம் செலுத்துபவரா…? இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க… நிச்சயம் தள்ளுபடி கிடைக்கும்…!

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
நீங்கள் யூபிஐ மூலம் பணம் செலுத்துபவரா…? இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க… நிச்சயம் தள்ளுபடி கிடைக்கும்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யூபிஐ மூலம் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. எனவே, நீங்கள் யூபிஐ மூலம் பணம் செலுத்திப் பொருட்கள் வாங்குபராக இருந்தால், அரசின் இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

அதாவது, நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்குப் பதிலாக, யுபிஐ மூலம் பணம் செலுத்தும் பட்சத்தில், கட்டணத்தில் ஒரு சிறிய தள்ளுபடி அளித்து கிரெடிட் கார்டை விட குறைவான கட்டணத்தை வசூலிக்கும் ஒரு புதிய திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன்மூலம், மக்களின் யூபிஐ பயன்பாடும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது கணிசமாக பாதிக்கப்படலாம் என்றும் யூகிக்கிறார்கள்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு 2-3% கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வணிக தள்ளுபடி விகிதம் (MDR) என்று அழைக்கப்படுகிறது. ஆனால், யூபிஐ மூலம் பணம் செலுத்துவதற்கு இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கிரெடிட் கார்டு மூலம் ஒரு கடைக்காரருக்கு நீங்கள் பணம் செலுத்தும்போது, ​​அவர் அதில் 2-3% வரை எம்டிஆர் செலுத்த வேண்டும். பல கடைக்காரர்கள் இந்த கட்டணத்தை அவர்களே செலுத்துகின்றனர். சில கடைக்காரர்கள், எம்டிஆர்-இன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துகிறார்கள்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், அதற்கு 2-3% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் வாடிக்கையாளரிடம் கூறுகிறார்கள். ஆனால், பெரிய அளவில் அல்லது மொத்தமாக பொருட்கள் வாங்கும்போது செலுத்த வேண்டிய எம்டிஆர் கட்டணமும் அதிகமாகிறது.

இதனை தவிர்க்கும் விதமாகவும், யூபிஐ கட்டணத்தின் பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையிலும், புதிதாக ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது, கிரெடிட் கார்டு மூலம் ஒரு பொருளுக்கு நீங்கள் ரூ.100 செலுத்த வேண்டும் என்றால், யூபிஐ மூலம் அதனை செலுத்தும் பட்சத்தில், நீங்கள் ரூ.100க்கு பதிலாக ரூ.98 மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறாக, ஷாப்பிங்கில் முன்கூட்டியே தள்ளுபடியைப் பெறுவது யூபிஐ மூலம் பணம் செலுத்துவதில் மக்களின் ஆர்வத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைக்கப் பெற்ற ஒரு அறிக்கையின்படி, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் இந்தத் திட்டத்தை பல தரப்பினருடனும் விவாதிக்க திட்டமிட்டுள்ளது. இ-காமர்ஸ் தளங்கள், கட்டண சேவை வழங்குநர்கள் மற்றும் என்பிசிஐ ஆகியவையும் இதில் அடங்கும். இது குறித்து பரிசீலிக்க, ஜூன் மாதம் அனைத்து தரப்பினரையும் அழைத்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

யூபிஐ பரிவர்த்தனை நேரம் குறைப்பு

அதே நேரத்தில், யூபிஐ மூலம் செலுத்தப்படும் பரிவர்த்தனைகளின் செயல்படுத்தப்படும் நேரமும் குறைக்கப்படுகிறது. இது, வருகிற ஜூன் 16ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, யூபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை செயலாக்க 30 விநாடிகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், இனி அதற்கு, 15 விநாடிகள் மட்டுமே ஆகும். பணம் செலுத்தப்பட்ட உடனேயே, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

நீங்கள் யூபிஐ மூலம் பணம் செலுத்துபவரா…? இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க… நிச்சயம் தள்ளுபடி கிடைக்கும்…!

Read More

Previous Post

இங்கிலாந்தின் முக்கிய 3 விக்கெட்டுகளை தட்டித் தூக்கிய ஆர்சிபி பவுலர்: யார் இந்த பிளெஸ்ஸிங் முஸரபானி? | RCB bowler took 3 key wickets zimbabwe versus England Who is Blessing Muzarabani

Next Post

Trump: ட்ரம்ப்பால் சரிந்த Apple பங்குகள் – என்ன பின்னணி?

Next Post
Trump: ட்ரம்ப்பால் சரிந்த Apple பங்குகள் – என்ன பின்னணி?

Trump: ட்ரம்ப்பால் சரிந்த Apple பங்குகள் - என்ன பின்னணி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin