Last Updated:
மக்கள் மத்தியில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு பெயர் பெற்ற பொதுத்துறை வங்கிகள், 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு கணிசமான வட்டியை வழங்குகின்றன.
தங்கள் பணத்தை பாதுகாப்பான மற்றும் நிலையான திட்டங்களில் முதலீடு செய்வதைப் பொறுத்தவரை, இந்திய மக்களிடையே ஃபிக்ஸட் டெபாசிட் (FD) பிரபலமாக உள்ளது. FD வட்டி விகிதங்களில் செய்யப்படும் ஒரு சிறிய மாற்றம் கூட, குறிப்பாக நீண்ட காலம் அல்லது பெரிய தொகையை முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் இறுதியில் பெறும் முதிர்வு தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். பல வங்கிகள் – குறிப்பாக சிறிய நிதி வங்கிகள் இப்போது 3 ஆண்டு FD திட்டங்களுக்கு 7.65% வரை நல்ல வட்டி வருமானத்தை வழங்குகின்றன.
சிறு நிதி வங்கிகளில், உத்கர்ஷ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank) தற்போது 3 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.65% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. பைசாபஜார் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகியவை தலா 7.50% வட்டி வழங்குகின்றன. அதே நேரத்தில் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 7.25% மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 7.10% வட்டியை வழங்குகின்றன. ஈக்விடாஸ், சிவாலிக் மற்றும் உஜ்ஜீவன் போன்ற பிற சிறு நிதி வங்கிகள் 7% முதல் 7.20% வரை போட்டி வட்டி விகிதங்களை வழங்குகிறார்கள்.
எனினும், எப்போதுமே சிறு நிதி வங்கிகளில் முதலீடு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ரூ.5 லட்சம் வரையிலான FD முதலீடுகள் DICGC-ஆல் காப்பீடு செய்யப்பட்டாலும், இந்த சிறு நிதி வங்கிகள், வழக்கமான பாரம்பரிய வங்கிகளிலிருந்து வித்தியாசமாக செயல்படுகின்றன. எனவே, உங்கள் அசல் மற்றும் வட்டி இரண்டும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் FD தொகையை DICGC இன்சூரன்ஸ் கவரேஜ் வரம்பிற்குள் முதலீடு செய்வது பாதுகாப்பானது.
தனியார் துறை வங்கிகளைப் பொறுத்தவரை, 3 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு RBL வங்கி 7.20% என்ற மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து SBM வங்கி இந்தியா 7.10%, பந்தன் வங்கி, யெஸ் வங்கி மற்றும் டிசிபி போன்ற வங்கிகள் தலா 7% வட்டியை வழங்குகின்றன. IndusInd வங்கி 6.90% வட்டி அளிக்கும் நிலையில், ICICI மற்றும் Axis வங்கிகள் போன்ற முன்னணி வங்கிகள் தலா 6.60% வட்டி வழங்குகின்றன. மேற்காணும் இந்த வட்டி விகிதங்கள் சிறு நிதி வங்கிகள் வழங்குவதைவிட சற்று குறைவாக இருந்தாலும், பொது வங்கிகளை விட சிறந்த வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவையாக உள்ளன.
மக்கள் மத்தியில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு பெயர் பெற்ற பொதுத்துறை வங்கிகள், 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு கணிசமான வட்டியை வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளில் 3 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்களுக்கு தற்போது அதிகபட்ச வட்டி விகிதமாக யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா 6.60% வட்டியை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து பேங்க் ஆஃப் பரோடா 6.50%, பஞ்சாப் நேஷனல் வங்கி 6.40%, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.30% வட்டியையும் வழங்குகின்றன.
சிறு நிதி வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வழங்குவதை விட இது சற்று குறைவான வட்டி விகிதம் என்றாலும், அதிக வருமானத்தை விட பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து முக்கிய தேர்வாக இருந்து வருகின்றன. முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, FD-யில் முதலீடு செய்ய எந்த வங்கியைத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களின் ரிஸ்க் எடுக்க நினைக்கும் அளவு மற்றும் விரும்பும் வட்டியைப் பொறுத்தது. சிறு நிதி வங்கிகள் தற்போது வட்டி விகித அட்டவணையில் முன்னிலையில் இருந்தாலும், ரூ.5 லட்சம் DICGC காப்பீட்டு வரம்பிற்குள் ஒருவரின் முதலீடு இருப்பது நல்லது. அதே நேரம், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சற்று குறைந்த வட்டி விகிதங்களை வழங்கினாலும் அதிக நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையை வழங்குகின்றன.
November 05, 2025 6:48 AM IST


