• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நிலைபெறுதலிலிருந்து மாற்றத்தை நோக்கி: இலங்கையின் புதிய அத்தியாயம்

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
நிலைபெறுதலிலிருந்து மாற்றத்தை நோக்கி: இலங்கையின் புதிய அத்தியாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இவான் பப்பாஜீயோர்ஜியு, 

இலங்கைக்கான பன்னாட்டு நாணய

நிதியத்தின் பணிக்குழுத் தலைவர்

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை பொருளாதாரம் பாரிய நெருக்கடியின் விளிம்பில் இருந்தது. அதிகாரிகளின் ஒருங்கிணைந்த மறுசீரமைப்புளுக்கும் இலங்கையர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று அது உறுதியான அடித்தளத்தில் நிற்கின்றது.



விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான ஏழாவது மதிப்பீடு மற்றும் இவ்வாண்டின் உறுப்புரை IV ஆலோசனை   என்பவற்றுக்கான கலந்துரையாடல்களை எமது  பன்னாட்டு நாணய நிதியத்தின் குழு நிறைவுசெய்துள்ளவேளையில், முக்கிய புள்ளிவிபரங்கள் பல உண்மைகளை உணர்த்துகின்றன. நெருக்கடியின் போது 70 சதவீதமாக உயர்ந்து, வீட்டலகு வருமானங்களைச் சுருக்கிய பணவீக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இலங்கை மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு காலத்தில் உறுதிநிலையற்றிருந்த பொதுப் படுகடனானது படுகடன் மறுசீரமைப்பின் பின்னர், தற்போது ஆற்றல்வாய்ந்த பாதைக்குத் திரும்பியுள்ளது. ஒதுக்குகள் மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக வரி வருமானத்தின் பங்களிப்பு நான்கு ஆண்டுகளில் இருமடங்காகியுள்ளது.


எனினும், நிலையுறுதிமிக்க  தேசிய முயற்சியும்  அத்துடன் புதிய மத்திய வங்கிச் சட்டம் தொடக்கம்  பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம் வரையும், வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடக்கம் ஆளுகை நடவடிக்கைத் திட்டம் வரையும் கடினமான ஆனாலும் திட்டமிட்ட மறுசீரமைப்புகளைக் கொண்ட மிக முக்கியமான கதை இப்புள்ளிவிபரங்களுக்குப் பின்னால் காணப்படுகின்றது.  


இம்மறுசீரமைப்புகள் வெறுமனே  நிலைமையை மீளமைக்கவில்லை; அவை 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமான புள்ளிகளைச் சேர்த்துள்ளன. உறுதிப்பாடு ஏற்கனவே அதன் பிரதிபலன்களைத் தரத் தொடங்கியுள்ளது.


இருப்பினும், உறுதிப்பாடு என்பது ஒருபோதும் இறுதி இலக்கல்ல.  அது வெறும் அடித்தளம் மாத்திரமே. அத்துடன், தற்போது அடுத்த அத்தியாயம் தொடங்குகின்றது; கடந்த அத்தியாயத்தைப் போலவே இது கடுமையானதாக இருக்கும்: அதாவது, பேரண்டப்பெருளாதார உறுதிப்பாட்டில் இருந்து பொருளாதார நிலைமாற்றத்திற்கு மாறுவதாகும். உறுதிப்பாடு மாத்திரம் ஏன் போதாது? ஏனெனில், உறுதிப்பாடு மாத்திரம்  தொழில்வாய்ப்புகளை உருவாக்கவோ அல்லது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ முடியாது அத்துடன் இலங்கையின் வளர்ச்சிப் பிரச்சனை என்பது ஒருபோதும் சிறந்த கருத்திட்டங்களுக்கான அல்லது தாராளமான ஊக்குவிப்புகளுக்கான பற்றாக்குறையாக இருந்ததில்லை.


தொழில்வாய்ப்புகள், தனியார் முதலீடு, ஏற்றுமதிகள், புத்தாக்கம் என்பவற்றைக் கொண்ட அத்தகைய வளர்ச்சியானது   தனிமைப்படுத்தப்பட்ட தலையீடுகளிலிருந்து எழுவதில்லை. வியாபாரங்கள் நம்பிக்கையுடன் திட்டமிடக்கூடிய,  போட்டியிடக்கூடிய மற்றும் விரிவாக்கம் செய்யக்  கூடிய சூழலொன்றை அது வேண்டிநிற்கின்றது.  அவ்வாறான சூழலைக் கட்டமைப்பதே தற்போதைய பணியாக விளங்குகின்றது.


மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரல் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் பெரும்பாலானவை ஏற்கனவே அதிகாரிகளின் சொந்தத் திட்டங்களிலேயே அமைந்துள்ளன. இப்போது தேவைப்படுவது புதுப்பிக்கப்பட்ட உத்வேகமேயாகும். சிக்கலான வியாபார ஒழுங்குவிதிகளைச் சீரமைத்து,  முதலீட்டாளர்களுக்காக உண்மையான ஒரே இடத்திலமைந்த வசதியளித்தல் சேவையை உருவாக்குங்கள். சிறந்த அரசாங்க முதலீட்டு முகாமைத்துவம் மற்றும் தனியார் துறையுடன் நன்கு நிருவகிக்கப்படும் பங்குடமைகள் என்பன ஊடாக உட்கட்டமைப்பு இடைவெளிகளுக்கு தீர்வுகாணுங்கள். வளங்கள் அவற்றின் மிகவும் உற்பத்தித்திறனுள்ள பயன்பாடுகளுக்குச் செல்லும் விதத்தில் காணி மற்றும் தொழிலாளர் சந்தைகளை நவீனமயப்படுத்துங்கள். தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் சிறு வியாபாரங்களுக்கான நிதியைப் பெறும்வழியை விரிவுபடுத்துங்கள். மேலும், இலங்கை நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளில் அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதை விடவும், அங்கு போட்டியிடும் விதத்தில் வர்த்தகத் தடைகளைக் குறைத்து சுங்கத்தை நவீனமயப்படுத்துங்கள்.


இம்மறுசீரமைப்புகளின் பிரதிபலன் கணிசமானதாக இருக்கக்கூடும்.  தற்போதைய பாதையிலேயே தொடர்ந்தும் செல்வதென்பது  அண்மைய மறுசீரமைப்புகளின் உந்துதல் குறைவடைவதற்கேற்ப  வெறுமனே  வளர்ச்சியை மிதமாக உயர்த்தும். ஆனாலும் முழுமையான  மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரல் முழுவதும் மேற்கொள்ளப்படும்  இலட்சியமிக்க, அனைத்தையும் உள்ளடக்கிய  முயற்சியானது ஆளுகை, வியாபார ஒழுங்குமுறைப்படுத்தல், வெளிநாட்டு சந்தைகள், தொழிலாளர் சந்தைகள் மற்றும் கொடுகடன் ஆகியன முழுவதும்  அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டு வளர்ச்சியை ஏறத்தாழ 1.4 சதவீதப் புள்ளிகளாக உயர்த்தி, செயலற்றுப் போயிருந்த வெளிநாட்டு முதலீட்டை மீண்டும் உயிர்ப்பிப்பதுடன், நடுத்தர கால வளர்ச்சியை சுமார் 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவிருக்கும் வேறுபாட்டினை  அடையாளப்படுத்தும்.


ஆற்றல்வாய்ந்த அரசாங்க நிதியிடல்கள் இன்றி இவற்றில் எதுவும் சாத்தியமாகாது. இந்நிலையில், வரி பற்றிய தற்போதைய விவாதத்திற்கு முறையான கவனம் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த அரசிறையைப் பேணும் அதேவேளை, சில வரி வீதங்களைக் குறைக்க முடியுமா என்று கேட்பது நியாயமானதாகும். அத்துடன்  வரவிருக்கும் நடுத்தர கால அரசிறை உபாயமானது எளிமையான, நியாயமான மற்றும் மிகவும் வினைத்திறன்மிக்க முறைமையை வடிவமைப்பதற்குரிய உகந்த இடமாகும். ஆயினும், போதுமான அரசிறையை ஈட்டுவதே இலக்காக இருக்க வேண்டும்; ஏனெனில் அதுவே வளர்ச்சிக்காக நிதியளிக்கின்றது. உட்கட்டமைப்பு, கல்வி, உற்பத்தித்திறன்மிக்க முதலீடு, சமூகச் செலவினங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாத்தியமாக்குவதில்  செலவிடாமல் அத்துடன்  அதிர்ச்சிகளுக்கு ஈடுகொடுப்பதற்கு திடமான அரசிறைக் கட்டமைப்பையும்  இறைசார் தாங்கியிருப்புக்களும் இன்றி   கடினமான  காலங்களில் நம்பகமாகச்  செலவிடாமல் ஒரு தேசமானது வளர்ச்சியடைய முடியாது. 


மக்கள் மீதான தாக்கத்திலிருந்து இவற்றில் எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. 2022 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் சுமை வீட்டலகுகளால் சுமக்கப்பட்டது, அவர்களில் பலர் நெருக்கடி தீவிரமடைந்ததால் இன்னல்களை அனுபவித்தனர், வறுமை ஏறத்தாழ இருமடங்காகியதுடன், பல இளைஞர்கள் தொழில் தேடிக்கொள்வதில் இன்னும் போராடி வருகின்றனர். பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பது மாத்திரமின்றி மக்களை மீண்டும் உற்பத்தித்திறன் மிக்க பணியில் ஈடுபடுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் பரவலாகப் பகிரப்படுவதை உறுதிசெய்வதற்கும் சமூகப் பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவது அவசியமாகின்றது.


கடினமான விடயங்களைச் செய்ய முடியும் என்பதை இலங்கை ஏற்கனவே நிரூபித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளின் மறுசீரமைப்புகள் எளிதானவை அல்ல, ஆனால் அவை பலனளித்துள்ளன. அடுத்த அத்தியாயத்திற்கும் அதே மன உறுதி  தேவைப்படுகின்றது.   இனி ஒரு நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைப்பதற்காக அல்ல, மாறாக மிகவும் செழிப்பான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே அது தேவைப்படுகின்றது. அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இலங்கைக்குரியது, நாம் உங்களது உறுதியான பங்காளியாக இருக்க எண்ணுகின்றோம்.



Read More

Previous Post

கருட கமன தவ ஸ்தோத்திரம் | Makkal Osai

Next Post

நான்காக உடையும் உத்தர பிரதேசம்.. சீக்கிரமே வரப்போகுது மிக பெரிய மாற்றம்! திட்டம் என்ன | Uttar Pradesh May Be Split into 4 States? Minister Om Prakash Rajbhar Revives Long-Pending Demand

Next Post
நான்காக உடையும் உத்தர பிரதேசம்.. சீக்கிரமே வரப்போகுது மிக பெரிய மாற்றம்! திட்டம் என்ன | Uttar Pradesh May Be Split into 4 States? Minister Om Prakash Rajbhar Revives Long-Pending Demand

நான்காக உடையும் உத்தர பிரதேசம்.. சீக்கிரமே வரப்போகுது மிக பெரிய மாற்றம்! திட்டம் என்ன | Uttar Pradesh May Be Split into 4 States? Minister Om Prakash Rajbhar Revives Long-Pending Demand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin