பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது சாலையோர குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக துணை ஆணையர் ஹஸ்ரத் வாலி சுக்கர் கூறுகையில்,
ஹர்னை மாவட்டத்தின் ஷாஹ்ராக் பகுதியில் மினி லாரி மீது குண்டு வெடித்ததாகவும், இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆவார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
சட்ட அமலாக்க முகமைகளின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகளைக் கைது செய்யத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் இதுபோன்ற தாக்குதல்களுக்குச் சட்டவிரோத பலூச் விடுதலை ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.