அதேபோல், ரயில்வே இணை அமைச்சராக உள்ள ரவ்நீத் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. மேலும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, டெல்லி பாஜக தலைவராகவும், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, உத்தரப்பிரதேச பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


