• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நியூசிலாந்து சிகரத்தில் இருந்து விழுந்த இருவர் பலி

GenevaTimes by GenevaTimes
November 25, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
நியூசிலாந்து சிகரத்தில் இருந்து விழுந்த இருவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

3,724 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏறிய நான்கு பேரில் இருவர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை (24) அன்று இரவு  அவசர சேவைகளைத் தொடர்பு கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை (25) அன்று அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் மற்றைய இருவரும்  காயங்கள் ஏற்படாமல்  மீட்கப்பட்டனர்.

பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, உயிரிழந்த மலை வீரர்களின் சடலங்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. சடலங்கள் மீட்கும் பணி தற்போது “கடினமான ஆல்பைன் சூழலில்” நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தின் தென் தீவு வரை நீண்டு இருக்கும் தெற்கு ஆல்ப்ஸின் மீது உயர்ந்து நிற்கும் மவுண்ட் குக்கி மலையின் சிகரத்தை அடைவது பெரிய பிளவுகள் மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக அனுபவம் வாய்ந்த மசையேற்ற வீரர்களுக்கு கூட கடினமான விடயமாகும்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் நன்கு அறியப்பட்ட, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டி என நியூசிலாந்து ஊடக நிறுவனமான ஸ்டஃப் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மூன்று மலையேற்ற வீரர்கள் மலையில் காணாமல் போனார்கள். பல நாள் தேடலுக்குப் பின்னரே அவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு சீரற்ற வானிலையே காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மவுண்ட் குக் மலைச் சிகரத்திற்கு செல்ல முயன்ற பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு மலையேற்றப் பருவம் குறைந்தது ஒரு உயிரிழப்பு கூட நிகழாமல் கடந்து செல்வதில்லை என நியூசிலாந்து ஆல்பைன் கிளப் க்ளைம்ப்என்இசட் தெரிவித்துள்ளது.

 



Read More

Previous Post

Tomato Price | தக்காளி விலை திடீர் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? | வணிகம்

Next Post

IPL 2026 : ரிஷப் பந்த் முதல் சஞ்சு சாம்சன் வரை.. ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு தக்கவைத்த வீரர்கள் இவர்கள்தான்.. | விளையாட்டு

Next Post
IPL 2026 : ரிஷப் பந்த் முதல் சஞ்சு சாம்சன் வரை.. ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு தக்கவைத்த வீரர்கள் இவர்கள்தான்.. | விளையாட்டு

IPL 2026 : ரிஷப் பந்த் முதல் சஞ்சு சாம்சன் வரை.. ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு தக்கவைத்த வீரர்கள் இவர்கள்தான்.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin