Last Updated:
அனைத்து ஒருநாள் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
ஒருநாள் தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி வதோதராவில் நடைபெறும் முதல் போட்டியுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 14-ஆம் தேதி ராஜ்கோட்டிலும், மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி ஜனவரி 18-ஆம் தேதி இந்தூரிலும் நடைபெறவுள்ளன. அனைத்து ஒருநாள் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும்.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் டி20 தொடர் ஜனவரி 21-ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும். அடுத்தடுத்த போட்டிகள் ஜனவரி 23-ஆம் தேதி ராய்ப்பூரிலும், ஜனவரி 25-ஆம் தேதி குவஹாத்தியிலும், ஜனவரி 28-ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும். இந்தத் தொடரின் கடைசி டி20 போட்டி ஜனவரி 31-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடத்தப்பட உள்ளது. டி20 போட்டிகள் அனைத்தும் இரவு 7:00 மணிக்குத் தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஷுப்மன் கில் (சி), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.


