Last Updated:
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது
சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் விளையாடும் இந்திய டி20 அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரர் திலக் வர்மாவுக்கு விஜய் ஹசாரே தொடரில் விளையாடிய போது காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்தது. அவருக்குப் பதிலாக அணியில் ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையில், மற்ற வீரர்களுடன் திலக் வர்மா உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியான நிலையில், விரைவில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உடல் நிலை இன்னும் முழுமையாக குணமடையாததால் கடைசி 2 டி20 போட்டிகளிலும் திலக் வர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
எனவே, ஷ்ரேயஸ் ஐயரே அந்த போட்டிகளில் களமிறங்க உள்ளார். வரும் 3ஆம் தேதி நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டியில் திலக் வர்மா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலக் வர்மா இல்லாத சூழலிலுல் இந்திய அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, அபிசேக் சர்மா உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கின்றனர்.


