Last Updated:
அவர் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் பயிற்சியைத் தொடங்க குறைந்தது 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயம் காரணமாக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடி வந்த திலக் வர்மாவுக்கு, ராஜ்கோட்டில் வைத்து திடீரென அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு டெஸ்டிகுலர் டார்ஷன் எனப்படும் ரத்த ஓட்ட பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, அவர் வியாழக்கிழமை காலையில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் ஐதராபாத் சென்று ஓய்வெடுக்க உள்ளார்.
அவர் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் பயிற்சியைத் தொடங்க குறைந்தது 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஜனவரி 21 முதல் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். கடைசி 2 போட்டிகளில் அவர் பங்கேற்பது அவரது உடல்நிலையைப் பொறுத்தே அமையும்.
Jan 08, 2026 10:31 PM IST


