Last Updated:
ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா விளையாடி வருகிறார். மேலும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்று இருக்கிறார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உரையாட உள்ளது. முதல் போட்டி ஜனவரி 11ஆம் தேதியும், இரண்டாவது போட்டி ஜனவரி 14ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஜனவரி 18ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் அனைத்தும் பகல் – இரவு ஆட்டங்களாக மதியம் 1.30 மணி அளவில் தொடங்கி நடைபெறும். அதன் பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. அதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை. இதற்கான காரணங்கள் குறித்து பிசிசிஐ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதாவது ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா விளையாடி வருகிறார். மேலும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்று இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடருக்காக அவர் சிறப்பான முறையில் தயாராக வேண்டும் என்ற அடிப்படையிலும், அவரது வேலைப்பளுவை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் ஒருநாள் போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.


