அனுமதி பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு தனியான அடையாள எண், முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அக்டோபர் முதலாம் திகதி முதல் வைப்பிட்டு கணக்குகளை ஆரம்பிக்கும் போது அல்லது பராமரிக்கும் போது, தனிப்பட்ட அடையாள எண்களைப் பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப் பட்டுள்ளது.மேலும்,ஏற்கனவே இவற்றிலுள்ள வைப்பீட்டாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2023 எண். 17 இன் கீழ், வைப்புத் தொகையாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களைப் பதிவு செய்வதற்காக, வழங்கப்பட்டிருந்த முந்தைய வழிமுறைகளுக்குப் பதிலாகவே புதிய செயல்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படவுள்ளது.
தற்போதுள்ள வைப்பீட்டாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களில் வைப்பு கணக்குகளை திறக்கும் போது அல்லது பராமரிக்கும் போது, வைப்பாளர்கள் தனிப்பட்ட அடையாள எண்களைப் பயன்படுத்துவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
