• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`நிதி நிறுத்தம்' ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகம்!

GenevaTimes by GenevaTimes
April 16, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
`நிதி நிறுத்தம்' ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கும்  ஹார்வார்டு பல்கலைக்கழகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது’ என்பது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டிட்யூட்.

இவர் இஸ்ரேல் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்று இவர் நினைக்கிறார்.

அதற்கேற்ற மாதிரி, அவர் பதவியேற்றதும், கல்வி நிலையங்களில் யாரும் அமெரிக்கா அரசுக்கு எதிராக எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

அப்படி ஈடுபடும் அமெரிக்க மாணவர்கள் கல்வி கற்பதில் இருந்து நிறுத்தப்படுவார்கள். பிற நாட்டு மாணவர்கள் அவர்களது நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், எந்தக் கல்வி நிலையத்தின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசின் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த வலையில் தற்போது அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது. இது உலகின் மிக பிரபலமான பல்கலைக்கழகம் ஆகும்.

"ஹார்வார்டுக்கு விதிவிலக்கு கிடையாது" - ட்ரம்ப்
“ஹார்வார்டுக்கு விதிவிலக்கு கிடையாது” – ட்ரம்ப்

ட்ரம்ப் பதிவு

சமீபத்தில், ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், “ஹார்வார்டு பல்கலைக்கழகம் தனது வரி இல்லா தகுதியை இழக்க வேண்டும். அது தொடர்ந்து அரசியல் கருத்துகள், தீவிரவாதம் போன்றவற்றை ஊக்குவித்து வந்தால் அந்தப் பல்கலைக்கழகத்தின் மீது அரசியல் நிறுவனங்கள் போல வரி விதிக்கப்பட வேண்டும்.

வரி விலக்கு என்பது மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே” என்று பதிவிட்டிருந்தார்.

அடுத்ததாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், ஆட்சேர்ப்பு, பணிசேர்ப்பு போன்ற நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் அரசு உத்தரவிட்டது.

`நானே உதவுகிறேன்’ – ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு ஜாக்பாட்!

ஹார்வார்டின் பதில்

இந்த அதிரடிக்கு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் முதல்வர் ஆலன் கார்பர் தனது மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பதிலளித்தார்.

அதில், “ஹார்வார்டு பல்கலைக்கழகம் அரசின் எந்த நிபந்தனைக்கும் உடன்படாது.எக்காரணத்தை கொண்டு அது தனது சுதந்திரத்தையும், அரசியல் சாசன உரிமையையும் இழக்காது” என்று குறிப்பிட்டிருந்தார்.

2.2 பில்லியன் டாலர்கள் + 60 மில்லியன் டாலர்கள் நிறுத்தம்
2.2 பில்லியன் டாலர்கள் + 60 மில்லியன் டாலர்கள் நிறுத்தம்

நிதி நிறுத்தம்

இதனையடுத்து, ட்ரம்ப்பின் அரசு ஹார்வார்டு பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியத்தையும், 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தையும் நிறுத்தியுள்ளது.

இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹார்ட்வார்டு பல்கலைக்கழகத்தின் இந்த நிலைப்பாடு டாப் பல்கலைக்கழகங்களிடம் இருக்கும் தொல்லைக்கொடுக்கும் பண்பை காட்டுகிறது.

அவர்கள் அரசின் சட்டங்களை பின்பற்றாமல் அரசின் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

சமீப காலங்களாக, அந்தப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் போராட்டங்கள் ஏற்றுகொள்ள முடியாதது. அவர்கள் யூத மாணவர்களுக்கு கொடுக்கும் தொல்லையை தாங்கி கொள்ள முடியாது.

அவர்களுக்கு அரசின் பணம் வேண்டுமென்றால், அரசு கூறும் மாற்றங்களை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அரசு இவ்வளவு கூறியும், அந்தப் பல்கலைக்கழகம் செவிசாய்க்க துளியும் தயாராக இல்லை. அவர்கள் அவர்களது சுதந்தத்திரத்தை முதன்மையாக கருதி போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

Trump tariffs: “சீன அதிபர் புத்திசாலி; தன் நாட்டை அவர் நேசிக்கிறார்” – வரி விவகாரத்தில் ட்ரம்ப்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Previous Post

‘ஊசி மூலம் நிறம்’ வதந்தி: தர்பூசணி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பு | Farmers suffer for watermelon prices fall down

Next Post

பெட்ரோனாஸ் எரிவாயு: புத்ரா ஹைட்ஸில் எரிவாயு விநியோகம் ஜூலை 1 ஆம் தேதிக்குள் மீட்டெடுக்கப்படும்

Next Post
பெட்ரோனாஸ் எரிவாயு: புத்ரா ஹைட்ஸில் எரிவாயு விநியோகம் ஜூலை 1 ஆம் தேதிக்குள் மீட்டெடுக்கப்படும்

பெட்ரோனாஸ் எரிவாயு: புத்ரா ஹைட்ஸில் எரிவாயு விநியோகம் ஜூலை 1 ஆம் தேதிக்குள் மீட்டெடுக்கப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin