Last Updated:
புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆக்கபூர்வமாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும் அமைய வேண்டும் என்று பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் அமைப்புக்கு புதிய துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நிதி ஆயோக் அமைப்பை பாராட்டியுள்ள பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிப் பாதையின் தூண் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவின் கொள்கை வடிவமைப்பில் மிக முக்கியமான அங்கமாக விளங்கும் நிதி ஆயோக் அமைப்பை மத்திய அரசு தற்போது மறுசீரமைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சிப் பாதையில் இந்த அமைப்பு ஒரு ‘முக்கிய தூணாக’ உருவெடுத்துள்ளதாகப் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான உறவை வளர்க்கும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவதிலும், நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதிலும் நிதி ஆயோக் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது என்றும் மக்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும்’ திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்த அமைப்பு ஒரு உந்துசக்தியாகத் திகழ்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக அசோக் குமார் லாகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ராஜீவ் கௌபா, பேராசிரியர் கே.வி. ராஜு, பேராசிரியர் கோபர்தன் தாஸ், பேராசிரியர் அபய் கரந்திகர், டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Met Shri Ashok Kumar Lahiri Ji and conveyed my best wishes on his being appointed as the Vice Chairman of NITI Aayog. His rich experience in economics and public policy will greatly strengthen India’s reform journey and the journey towards becoming a Viksit Bharat. I am confident… pic.twitter.com/NQvAGNsgoN
— Narendra Modi (@narendramodi) April 25, 2026
புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆக்கபூர்வமாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும் அமைய வேண்டும் என்று பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
NITI Aayog has emerged as a vital pillar in India’s policy-making architecture, fostering cooperative federalism, furthering reforms and boosting ‘Ease of Living.’ It serves as a dynamic platform for innovation and long-term strategic thinking across sectors.
The Government has…
— Narendra Modi (@narendramodi) April 25, 2026
வெறும் கொள்கைகளை மட்டும் வகுக்காமல், நீண்ட கால வியூகங்களை உருவாக்குவதற்கும், பல்வேறு துறைகளில் புதுமைகளைப் புகுத்துவதற்கும் நிதி ஆயோக் ஒரு துடிப்பான தளமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் பொருளாதார இலக்குகளை அடைவதற்கும், மாநிலங்களின் தேவைகளை மையமாகக் கொண்டு திட்டங்களை வடிவமைப்பதற்கும் இந்த மறுசீரமைப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர், உறுப்பினர்கள் நியமனம்.. வளர்ச்சிப் பாதையின் தூண் என பிரதமர் பாராட்டு


