Last Updated:
“2025 சட்டமன்றத் தேர்தலில், அடுத்த 30 வருடத்திற்கு நிதிஷ்தான் முதல்வர் என என்.டி.ஏ. கூட்டணி தெரிவித்தது. அப்போதே நாங்கள், நிதிஷ் குமாரை கடத்திவிடுவார்கள், என்று தெரிவித்திருந்தோம்” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
“நிதிஷ் குமாரை கடத்திவிடுவார்கள், மீண்டும் அவரை முதலமைச்சர் இருக்கையில் அமரவிடமாட்டார்கள் என்று தெரிவித்திருந்தோம். குறிப்பாக ஆறு மாதத்திற்கு மேல் நிதிஷ் குமார், முதலமைச்சர் இருக்கையில் இருக்கமாட்டார் என்றும் தெரிவித்திருந்தோம்.” என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துவந்த நிதிஷ் குமார் இன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு அம்மாநிலத்தில் சிலர் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ஏன் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு செல்கிறேன் என்பதைத் தெரிவித்திருந்தார்.
நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, நீங்கள் தொடர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து, ஆதரவு தந்துவந்துள்ளீர்கள். மேலும் அந்த நம்பிக்கையின் பலத்தில்தான் நாங்கள் பீகாருக்கும் உங்கள் அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம்.
தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. எனவே இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.
பீகார் மக்களுடனான எனது இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும், வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்கும் என்றும் நான் மனமார உறுதியளிக்கிறேன். அமைக்கப்படும் புதிய அரசாங்கத்திற்கு எனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; “எங்களுக்கு இது முன்பே தெரியும். 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி ஜே.டி.யு. அழிந்துவிடும் எனத் தெரிவித்திருந்தோம். மகாராஷ்டிராவில் என்ன நடந்ததோ அதன் மேம்பட்ட வடிவம்தான் இது.
#WATCH | Patna | On Bihar CM Nitish Kumar going to the Rajya Sabha, Bihar LoP, Tejashwi Yadav says, “Everyone knows that in the Bihar elections, the NDA had given this slogan ‘2025 se 30 phir se Nitish’. The BJP and NDA’s constituent parties know how the elections were conducted… pic.twitter.com/6ni8RZ0dvT
— ANI (@ANI) March 5, 2026
2025 சட்டமன்றத் தேர்தலில், அடுத்த 30 வருடத்திற்கு நிதிஷ்தான் முதல்வர் என என்.டி.ஏ. கூட்டணி தெரிவித்தது. அப்போதே நாங்கள், நிதிஷ் குமாரை கடத்திவிடுவார்கள், மீண்டும் அவரை முதலமைச்சர் இருக்கையில் அமரவிடமாட்டார்கள் என்று தெரிவித்திருந்தோம். குறிப்பாக ஆறு மாதத்திற்கு மேல் நிதிஷ் குமார், முதலமைச்சர் இருக்கையில் இருக்கமாட்டார் என்றும் தெரிவித்திருந்தோம்.
கூட்டணி கட்சிகளின் கதையை முடிக்கும் வரலாற்றைக் கொண்டது பாஜக. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடிகளுக்கு எதிரானது பாஜக. இதை எல்லாம், பேசுபவர்களை முதல்வராக நீடிக்க பாஜக விடாது. அவர்களுக்குத் தேவை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர்தான்.” எனத் தெரிவித்தார்.


