உலக நாடுகளிடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருவதாலும், அமெரிக்க மந்தநிலை உச்சத்தை எட்டும் என்ற அச்சத்தாலும் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் சேமித்து வருகின்றன. கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் யுபிஎஸ் குரூப் ஏஜி ஆகியவை தங்கத்தின் மதிப்பு வலுவாக இருப்பதாக நம்புகின்றன. மேலும் பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்பாக தங்கம் இருப்பதன் காரணமாகவும், 2025-ம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுன்றன. வர்த்தகப் போர் தீவிரமடைந்த பிறகு தங்கத்தின் விலைகள் கடும் உயர்வைக் கண்டன. இந்தியாவில், ஒரு வாரத்திற்குள் தங்கம் ரூ.5,000-க்கு மேல் உயர்ந்தது. இது முதலீட்டாளர்களிடையே இருக்கும் கொள்முதல் ஆர்வத்தைக் குறிக்கிறது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.95,000 என்ற அளவைத் தாண்டியது.
நிலையற்ற காலங்களில் தங்கம் ஏன் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது?
தங்கம் மதிப்புமிக்க சேமிப்பு முதலீடாகும், குறிப்பாக பொருளாதார அல்லது புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஏற்படும் போது இதன் மதிப்பு இன்னும் அதிகரிகிறது என இந்திய வெள்ளி மற்றும் நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் (IBJA) துணைத் தலைவரும், ஆஸ்பெக்ட் குளோபல் வென்ச்சர்ஸின் நிர்வாகத் தலைவருமான அக்ஷா காம்போஜ் கூறுகிறார்.
“பங்குச் சந்தைகள் நிலையற்றதாக மாறும்போது அல்லது நாணயங்கள் ஏற்ற இறக்கமாக மாறும்போது, தங்கம் அதன் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்வதோடு, பணவீக்கத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பையும் நிலைத்தன்மை உணர்வையும் வழங்குகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
மார்ச் மாதத்தில் தங்க இடிஃப்-களின் முதலீடு ஏன் குறைந்தது?
இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சங்கத்தின் (AMFI) அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் தங்க இடிஃப்-களில் இருந்து முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த அளவு வெளியேறிய போதிலும், தங்கத்தின் மதிப்பு எப்போதும் போலவே வலுவாக உள்ளது. தங்கத்தின் விலைகள் உச்சத்தில் இருக்கும்போது முதலீட்டாளர்கள் இடிஃப் முதலீடுகளில் இருந்து விலகி, பணத்தைத் திரும்பப் பெறுவதைத் தேர்ந்தெடுப்பது மிகவும் இயல்பானது தான்,” என அக்ஷா காம்போஜ் கூறினார்.
இந்தியாவில் தங்கம் மக்களின் உணர்ச்சி மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது நிச்சயமற்ற காலங்களில் அதன் ஈர்ப்பை இன்னும் வலுப்படுத்துகிறது. நகைகள், நாணயங்கள் அல்லது டிஜிட்டல் வடிவங்கள் என எதுவாக இருந்தாலும், எதிர்காலப் பாதை தெளிவாகத் தெரியாதபோது மக்கள் தங்கத்தை நோக்கித் திரும்பத் தொடங்குகிறார் என்பது தெளிவாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 28, 2025 3:20 PM IST
நிச்சயமற்ற காலங்களில் தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதாகக் கருதப்படுவதற்கான காரணம் தெரியுமா?

