Last Updated:
பனிப்பாறை நகர்வு, காடுகள் அழிப்பு, நிலநடுக்கம், சுனாமி, சுற்றுச்சூழல் மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும்
ஜி.எஸ்.எல்.பி. எஃப் 16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக் கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் – இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்து ஜி எஸ் எல் வி ராக்கெட் மூலம் நிசார் செயற்கோளை விண்ணில் இன்று ஏவுகின்றன.
ஸ்ரீஹரிகோட்டவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.30 மணிக்கு ராக்கெட்டை ஏவுவதற்கான 27 மணி நேர கவுண்டவுன் நேற்று மதியம் 2.10 மணிக்கு தொடங்கியது.
மேலும், நிசார் செயற்கைக்கோளை ஏவும் திட்டம் வெற்றியடைய திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டில் நாசாவும் – இஸ்ரோவும் நிசார் செயற்கைக்கோளை 2024ம் ஆண்டில் விண்ணில் ஏவுவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தனர். ரிசீவர் ஆண்டனா அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் செயற்கோள் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
நாசா – இஸ்ரோ செயற்கை துளை ரேடார் என அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் எல் பேண்ட், எஸ் பேண்ட் ரேடார்களை உள்ளடக்கியுள்ளது. இரண்டு ரேடார்கள் இந்த செயற்கைக்கோளில் செயல்படுவதால், பூமியில் சில அங்குலம் நிலங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கூட மிக துல்லியமாக கண்டறியலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை முழுமையாக ஸ்கேன் செய்யும் இந்த செயற்கைக்கோள் பனிப்பாறை நகர்வு, காடுகள் அழிப்பு, நிலநடுக்கம், சுனாமி, சுற்றுச்சூழல் மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிசார் செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
July 30, 2025 7:49 PM IST