• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிக்கோலஸ் பூரன் வேண்டுமா.. ஹர்திக் பாண்டியாவை கொடுங்க.. சீனுக்குள் வந்த லக்னோ அணி! | Hardik Pandya: LSG offers Nicholas Pooran for the trade of Hardik Pandya with Mumbai indians ahead of IPL 2027

GenevaTimes by GenevaTimes
August 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நிக்கோலஸ் பூரன் வேண்டுமா.. ஹர்திக் பாண்டியாவை கொடுங்க.. சீனுக்குள் வந்த லக்னோ அணி! | Hardik Pandya: LSG offers Nicholas Pooran for the trade of Hardik Pandya with Mumbai indians ahead of IPL 2027
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Tuesday, August 11, 2026, 14:23 [IST]

மும்பை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்கும் போட்டியில் லக்னோ அணியும் இணைந்திருக்கிறது. லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு டிரேட் செய்யப்பட்டுவிட்ட சூழலில், அந்த அணி கேப்டனை தேடி வருகிறது. இதனால் மும்பை அணியுடன் பேச்சுவார்த்தையையும் லக்னோ அணி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சீசனில் மும்பை அணி நிர்வாகத்துடன் எழுந்த மனக்கசப்பு காரணமாக அந்த அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறும் முடிவை எடுத்துவிட்டார். அதேபோல் மும்பை அணியும் இளம் வீரரான திலக் வர்மா தலைமையில் புதிய அணியை கட்டமைக்க தீவிரமாக உள்ளது.

Hardik Pandya

ஹர்திக் பாண்டியா ஃபினிஷர், வேகப்பந்துவீச்சாளர் மற்றும் கேப்டன் என்று 3 பணிகளை செய்யக் கூடியவர், இதனால் ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தையே பல்வேறு அணிகளுக்கும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியாவை வாங்க முதலில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிக ஆர்வமாக இருந்தது. ஆனால் திடீரென சிஎஸ்கே நிர்வாகம் அந்த முடிவில் இருந்து பின் வாங்கியதாக தெரிகிறது.

இதனால் கேகேஆர், ராஜஸ்தான் அணிகள் மும்பை அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருப்பினும் மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை வைத்து பெரிய திட்டத்தை அரங்கேற்ற ஆலோசித்து வருகிறது. இதனை அத்தனை அணிகளும் ஓரளவிற்கு புரிந்து கொண்டு விலக தொடங்கிவிட்டன. ஹர்திக் பாண்டியா இல்லையென்றாலும், எந்த சிக்கலும் இல்லை என்று ஆலோசிக்க தொடங்கிவிட்டார்கள்.

சிஎஸ்கே அணியை தொடர்ந்து ராஜஸ்தான் அணியும் ஜெய்ஸ்வாலை மட்டுமே கொடுப்போம் என்று தெளிவாக கூறிவிட்டது. கேகேஆர் அணியும் ரிங்கு சிங்கை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் புதிதாக லக்னோ அணி களத்தில் குதித்திருக்கிறது. லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரனை கொடுப்பதாக முன் வந்துள்ளது.

நிக்கோலஸ் பூரன் ஏற்கனவே மும்பை அணிக்காக பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். அதேபோல் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு டிரேட் செய்யப்பட்டுவிட்டார். இதனால் லக்னோ அணி இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறது. கடந்த சீசனின் போது ஷர்துல் தாகூரை விட்டுக் கொடுத்த லக்னோ அணி, அர்ஜுன் டெண்டுல்கரை பெற்றுக் கொண்டது. இதனால் லக்னோ அணி உடனான டீல் முடிவடையக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

English summary

Hardik Pandya: LSG offers Nicholas Pooran for the trade of Hardik Pandya with Mumbai indians ahead of IPL 2027

Read More

Previous Post

ராஜித சேனரத்ன மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Next Post

2027 ஒருநாள் உலகக்கோப்பை: நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி..

Next Post
2027 ஒருநாள் உலகக்கோப்பை: நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி..

2027 ஒருநாள் உலகக்கோப்பை: நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin