
ஜோதிடத்தில் செல்வம், அழகு, ஆடம்பரம் மற்றும் காதலின் காரகனாக சுக்கிரன் கருதப்படுகிறார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி மட்டுமல்லாமல், அசுரர்களின் குருவாகவும் அறியப்படுகிறார். ஒவ்வொரு மாதமும் ராசிகளை மாற்றும் சுக்கிரன், அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார் – இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜனவரி 10, 2026 அன்று, சுக்கிரன் உத்திராடம் நட்சத்திரத்திற்கு பெயர்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். சூரியன் – சுக்கிரன் இணைவு ஒரு சக்திவாய்ந்த ஆற்றலை உருவாக்குவதால், இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நிதி நிலையில் பெரும் மாற்றங்களை கொண்டு வரப் போகிறது.
மேஷ ராசியினருக்கு, இந்த மாற்றம் பல வழிகளில் நல்ல பலன்களைத் தரும். குடும்பம், நண்பர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு உச்சத்தில் இருக்கும். வேலை மாற்றம் அல்லது புதிய வாய்ப்புகள் நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும்; வாழ்க்கைத் துணையுடன் இனிய நேரங்களை செலவிட முடியும்.
சிம்ம ராசியினருக்கு, வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நேர்மறையான மாற்றங்களும் ஏற்படும். குடும்பத்துடன் இனிய நேரம், தன்னம்பிக்கை உயர்வு, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு குறிப்பாக லாபம் அதிகரிக்கும். கடின உழைப்பின் பலன் கிடைக்கத் தொடங்கும்.
மகர ராசியினருக்கு, இந்த காலகட்டம் மிகவும் சாதகமானது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன், புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பங்குச் சந்தை மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். பணத்தை சம்பாதிப்பது மட்டுமல்லாமல், சேமிப்பதற்கும் வாய்ப்பு உண்டு. ஆன்மீக ஆர்வமும் அதிகரிக்கும்.
இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் உத்திராடம் நட்சத்திர பெயர்ச்சி பணப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவல் பொது ஜோதிட அறிவு மற்றும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பொது தகவலாக மட்டுமே கருதப்பட வேண்டும். எந்த முடிவையும் எடுக்கும் முன் தகுதிவாய்ந்த ஜோதிட நிபுணரை அணுகவும்.)

