Last Updated:
ஏசி 3-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 4 பைசாவும், ஏசி 2-டயர் மற்றும் 1-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 5 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாளை முதல் அதாவது டிசம்பர் 26 முதல் இந்திய இரயில்வேயின் பயணக் கட்டணங்கள் உயர்கின்றன. பணவீக்கம் மற்றும் இரயில்வே பராமரிப்புச் செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் ஏதுமில்லை. இது குறைந்த வருமானம் கொண்ட பயணிகளுக்குப் பெரிய நிம்மதியைத் தரும்.
ஸ்லீப்பர் வகுப்புகளில் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால் சாதாரண நீண்ட தூரப் பயணங்களுக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை அதிகரிக்கலாம்.
ஏசி 3-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 4 பைசாவும், ஏசி 2-டயர் மற்றும் 1-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 5 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலையும் அந்தந்த இரயில்வே மண்டலங்களின் முடிவின்படி ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைக்கு முன்னதாகவே (இன்று அல்லது அதற்கு முன்) டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தப் புதிய கட்டண உயர்வு பொருந்தாது. அவர்கள் பழைய கட்டணத்திலேயே பயணிக்கலாம்.
Dec 25, 2025 10:10 PM IST


