Last Updated:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் S.I.R., டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எழுப்ப உள்ளன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து விதிமுறைகளுக்குட்பட்டு பேசினால் உரிய தீர்வு காணப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கி, வரும் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை சுமூகமாக நடத்துவது தொடர்பாக தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கௌரவ் கோகோய், திமுக சார்பில் டிஆர் பாலு, திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கடந்த கூட்டத்தை போல போராட்டம் நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை கேட்டு கொண்டதாக கூறினார்.
S.I.R. விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக சார்பில் எழுப்பப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
அதேசமயம், எஸ்ஐஆர், டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தெரிவித்துள்ளன.
Delhi,Delhi,Delhi
November 30, 2025 9:27 PM IST
நாளை தொடங்கிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்… S.I.R., டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்


