• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாளை சிலிண்டர் விலை உயர்கிறதா? நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..!! | November 1, 2026 Money Changes: LPG Cylinder Price, ITR Deadline, Pension Life Certificate, Mutual Funds & Bank Fees

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாளை சிலிண்டர் விலை உயர்கிறதா? நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..!! | November 1, 2026 Money Changes: LPG Cylinder Price, ITR Deadline, Pension Life Certificate, Mutual Funds & Bank Fees
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாளை சிலிண்டர் விலை உயர்கிறதா? நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..!!

2026ஆம் ஆண்டு தொடங்கி 10 மாதங்கள் முடிந்து நவம்பர் மாதம் நாளை தொடங்க உள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் நம் பட்ஜெட்டை பதம் பார்க்கும் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இண்டேன் , பாரத் கேஸ், ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளை மாற்றி அறிவிப்பு வெளியிடும். ஈரான் போர் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட கூடிய வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலைகள் உயர்த்தப்பட்டன. இன்னமும் போர் முடியவில்லை இந்த சூழலில் நாளை சிலிண்டர் விலை மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. விலை குறைந்தால் நம்முடைய பட்ஜெட்டிற்கு நல்லது , விலை கூடினாலும் மாறாமல் இருந்தாலும் நமக்கு ஏமாற்றம் தான்.

நாளை சிலிண்டர் விலை உயர்கிறதா? நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..!!

வருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு : 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கு கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர் வரி செலுத்துவோருக்கு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு வழக்கமாக மாத சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கு பொருந்தாது.

ஓய்வூதியதாரர்கள்: 80 வயதிற்குட்பட்ட அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை (Jeevan Pramaan) சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 1 அன்று தொடங்குகிறது. ஓய்வூதியம் தடையின்றி தொடர்ந்து கிடைக்க, அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30-க்குள் தங்களது வாழ்நாள் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் : செபி வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களின் (AMCs) டிஜிட்டல் தளங்களில் Direct Planகள் இனி Default Option-ஆக மாற்றப்படுகின்றன. எனவே Regular Planகளீல் உள்ள அதிகப்படியான செலவு விகிதங்களை நிறுவனங்கள் வெளிப்படையாக காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கிகள்: இண்டஸ்இண்ட் வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கான பரிவர்த்தனை கட்டண விதிகள் மாற்றப்பட்டுள்ளன. கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் ஏடிஎம் பரிவர்த்தனைகள் அல்லது பிஓஎஸ் மூலம் செய்யப்படும் வர்த்தகங்கள் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கிரெடிட் கார்டு சேவைக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. கிரெடிட் கார்டு ரிவார்டு பாய்ண்ட்களை Redeem செய்யும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் 99 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

Share This Article

English summary

November 1, 2026 Money Changes: LPG Cylinder Price, ITR Deadline, Pension Life Certificate, Mutual Funds & Bank Fees

நாளை சிலிண்டர் விலை உயருமா? நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..!! / LPG cylinder prices are reviewed by oil marketing companies, though no domestic 14.2-kg price hike had been officially announced as of October 30; audit-case ITR filing has been extended to November 21.

Story first published: Saturday, October 31, 2026, 12:58 [IST]

Other articles published on Oct 31, 2026

Read More

Previous Post

உமர் அப்துல்லாவை விட அவரது மனைவி நிதி ரஸ்தான் பல மடங்கு பணக்காரர்.. சொத்து மதிப்பு எவ்வளவு? | Nidhi Razdan Net Worth: A Look at the Journalist and Omar Abdullah’s wife Wealth

Next Post

கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துங்கள்: கட்சிகளுக்கு மலாக்கா சீன அமைப்புகள் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துங்கள்: கட்சிகளுக்கு மலாக்கா சீன அமைப்புகள் வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin