அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்தால், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள முன்னணி அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஈரான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏப்ரல் முதலாம் திகதி புதன்கிழமை அன்று தெஹ்ரான் நேரப்படி இரவு 8:00 மணிக்கு இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அந்த அலுவலகங்களைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் (1 km) சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.
தாக்குதலுக்கு வாய்ப்புள்ள
ஈரான் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள தாக்குதலுக்குள்ளாக வாய்ப்புள்ள முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் பட்டியல் பின்வருமாறு:
- Cisco, HP, Intel, Oracle, Microsoft
-
Apple, Google, Meta, IBM, Dell -
Palantir, Nvidia, JP Morgan, Tesla, GE

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
உலகளாவிய பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த எச்சரிக்கை, தற்போதைய போர்ச் சூழலில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வப் பதிலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

