Last Updated:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.
திருச்சி மன்னார்புரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ள “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழாவிற்கான ஏற்பாடு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பரப்புரையை கடந்த ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி மதுரையில் தொடங்கினார். அதன் நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெற்ற நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.
இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டிய அமித் ஷா தமிழ் மொழிக்கு விரோதமாக இருப்பது போல் பாஜக கூட்டணியை காட்டுகின்றனர் என்றும் பேசினார்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடும் நிலை உள்ளதாகவும், போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது தடியடி நடத்தப்படுவதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
அமித் ஷா பங்கேற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேநேரம் இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து 2 ஆவது நாளான நாளை திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற உள்ள “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழாவில் அமித் ஷா பங்கேற்கிறார்.
Tiruchirappalli,Tamil Nadu


