• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நார்வே செஸ் தொடரில் 3-ம் இடம் பெற்ற குகேஷ் – ஜி.கே. வாசன் பாராட்டு | Norway Chess Series: GK Vasan congratulates Gukesh

GenevaTimes by GenevaTimes
June 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நார்வே செஸ் தொடரில் 3-ம் இடம் பெற்ற குகேஷ் – ஜி.கே. வாசன் பாராட்டு | Norway Chess Series: GK Vasan congratulates Gukesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. உலக சாம்பியனாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் தனது திறமையால், அறிவுக்கூர்மையால், கடின உழைப்பால் 3வது இடம் பிடித்திருப்பதால் இந்தியர்கள் பெருமை அடைகிறார்கள்.

நார்வே செஸ் தொடரில் நடைபெற்ற 10 சுற்று போட்டிகளின் இறுதியில் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3 வது இடம் பிடித்திருக்கிறார். இந்தியாவின் விளையாட்டுத்துறையின் திறமையை உலக அரங்கில் பரப்புவதில் தமிழக விளையாட்டு வீரர் குகேஷ் ஆற்றும் பங்கு போற்றுதலுக்குரியது. குகேஷ் இந்திய மக்களுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்படும் வகையில் ஊக்கம் அளிக்கும் வகையில் விளையாடி வருவது பெரும் பயன் தரும். குகேஷின் வெற்றிக்கு துணையாக இருந்த அவரது குடும்பத்தினருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுகள்.

நார்வே செஸ் தொடரில் 3 வது இடம் பெற்றிருக்கும் குகேஷை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டுகிறேன். குகேஷ் தொடர்ந்து உலக அளவில் செஸ் போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்று தாய் நாட்டின் புகழைப் பரப்ப வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் குகேஷ் தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்க, வெற்றி பெற ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி, பாராட்டி, துணை நிற்க வேண்டும். இவ்வாறு ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

பொறுப்பற்ற கணவனால் விரக்தி..! இரு குழந்தைகளுடன் ஏரியில் குதித்து விபரீத முடிவெடுத்த தாய்

Next Post

”இந்தவொரு திறன் இருந்தால் நீங்கள் ஏஐ-யை வெல்லலாம்” – சத்ய நாதெள்ளா கூறுவது என்ன? | one skill you need to beat ai satya nadella reveals

Next Post
”இந்தவொரு திறன் இருந்தால் நீங்கள் ஏஐ-யை வெல்லலாம்” – சத்ய நாதெள்ளா கூறுவது என்ன? | one skill you need to beat ai satya nadella reveals

''இந்தவொரு திறன் இருந்தால் நீங்கள் ஏஐ-யை வெல்லலாம்'' - சத்ய நாதெள்ளா கூறுவது என்ன? | one skill you need to beat ai satya nadella reveals

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin