• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாய்களைப் பதிவு செய்யத் தவறினால் அபராதம் அதிகரிக்குமா? சட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால் அபராதம் அதிகரிக்குமா? சட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால் அபராதம் அதிகரிக்குமா? சட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!

இலங்கையில் விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் தொடர்பான புதிய சட்டமூலத்துக்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு சில திருத்தங்களுடன் அனுமதி வழங்கியுள்ளது.


இலங்கையில் விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிப்பதுடன் நாய்களைப் பதிவு செய்வதை முறைப்படுத்தும் உத்தேச புதிய சட்டமூலத்துக்கு, குறிப்பிட்ட சில சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கடந்த 20ஆம் திகதி கூடிய இக்குழுவின் கூட்டத்தின் போதே, இந்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் மற்றும் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.

நாய்களுக்கு விசர்நாய்க்கடி தடுப்பூசி வழங்குதல், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்யும் நிலையங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றின் ஊடாக நாட்டில் விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிப்பதே இச்சட்டமூலத்தின் பிரதான இலக்காகும். 

அத்துடன், தேசிய விசர்நாய்க்கடி நோய் ஒழிப்பு மதியுரைக் குழு மற்றும் பிராந்திய விசர்நாய்க்கடி நோய் ஒழிப்பு மதியுரைக் குழுக்களை நிறுவுவதற்கும், தற்போது நடைமுறையிலுள்ள 476ஆம் அத்தியாய விசர்நாய்க்கடி நோய்க் கட்டளைச் சட்டம் மற்றும் 477ஆம் அத்தியாய நாய்களைப் பதிவுசெய்தல் கட்டளைச் சட்டம் ஆகியவற்றை இரத்து செய்து, புதிய நவீன சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கும் இது வழிவகை செய்கிறது.

இக்கூட்டத்தில் இடம்பெற்ற ஆலோசனைகளின் போது, நாய்களுக்கு முதலாவது விசர்நாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய வயதெல்லை தொடர்பான ஏற்பாடுகளைச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவினர் வலியுறுத்தினர்.

அதேவேளை, வீதிகளில் திரியும் தெருநாய்களுக்குத் தாமாக முன்வந்து உணவளிப்பவர்கள், அவற்றுக்குப் பாதுகாப்பளிப்பவர்கள் மற்றும் அவற்றுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுக்க உதவும் நபர்களின் சட்டபூர்வ நிலை குறித்தும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. 

தெருநாய்களுக்கு வெறும் மனிதாபிமான அல்லது தன்னார்வ அடிப்படையில் உதவுகின்ற காரணத்துக்காக அவர்களை அந்நாய்களின் சட்டபூர்வ உரிமையாளர்களாகக் கருதுவதையோ அல்லது நாய் உரிமையாளர்களுக்குரிய அனைத்து சட்டக் கடப்பாடுகளையும் அவர்கள் மீது சுமத்துவதையோ தவிர்ப்பதற்கான தெளிவான சட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதேவேளை, நாய்களுக்கான கருத்தடை நடவடிக்கைகளை ஹோர்மோன் ஊசி போன்ற முறைகளுக்குப் பதிலாக, தகுதிவாய்ந்த கால்நடை வைத்திர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் சத்திரசிகிச்சை மூலமே முன்னெடுக்க வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. 

அத்துடன் நாய்களைப் பதிவு செய்யத் தவறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகளைத் திருத்துதல், வணிக ரீதியான நாய் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க நிலையங்களின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்தி ஒழுங்குமுறைகளை மேலும் பலப்படுத்துதல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்கான கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும், விசர்நாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நாய்களைக் கையாளும் போது கால்நடை மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் முறையான நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவமும், தேசிய மற்றும் பிராந்திய மதியுரைக் குழுக்களில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நிபுணத்துவ நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

Read More

Previous Post

பாரிசானுடன் இணைந்து வேட்பாளர்களை அறிவிக்கும் திட்டமா? பாஸ் மறுப்பு | Makkal Osai

Next Post

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு முன் வரவு வைக்கப்படும் பி.எம்.கிசான் 24வது தவணை

Next Post
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு முன் வரவு வைக்கப்படும் பி.எம்.கிசான் 24வது தவணை

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு முன் வரவு வைக்கப்படும் பி.எம்.கிசான் 24வது தவணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin