விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
நாட்டை வங்குரோத்து அடையச் செய்த ராஜபக்சவை 2022ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக அமர வைப்பதில் நாட்டு மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாமலை ஜனாதிபதியாக்கினால் அவர்கள் மக்களே அல்ல
2029 ஆம் ஆண்டு நல்ல பிள்ளை என்று கூறி நாமலை ஜனாதிபதியாக்க யாராவது கை ஓங்கினால் அவர்கள் மக்களாக இருக்க முடியாது எனவும் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

தம்மைப் போல் அல்லாமல் ராஜபக்சாக்களிடம் பணம் இருப்பதால் எந்நேரமும் பேருந்துகளில் மக்களை ஏற்றிக்கொண்டு பேரணிகளை நடத்தலாம் என்றாலும் அதுபற்றி அவ்வளவாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

