• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாமலின் வழக்கு விசாரணையில் வெளியாகிய அச்சுறுத்தல்! அலி சப்ரியை இலக்குவைத்து நீதிமன்றில் கேள்வி

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாமலின் வழக்கு விசாரணையில் வெளியாகிய அச்சுறுத்தல்! அலி சப்ரியை இலக்குவைத்து நீதிமன்றில் கேள்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சட்ட ரீதியாக மிகவும் பரபரப்பான வாரமாக அமைந்திருந்தது.

கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற வழக்கிலும், 28ஆம் திகதி கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கிலும் அவர் இரு தடவைகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது.


சிறைச்சாலையில் காலத்தைக் கழிப்பதைவிட இவ்வாறு நீதிமன்ற வளாகத்தில் நேரத்தைச் செலவிடுவது எவ்வளவோ மேல் எனச் சிலர் மத்தியில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிணை கோரல் 


இந்த வழக்குகளில் நாமல் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஷவேந்திர பெர்னாண்டோ மற்றும் அலி சப்ரி ஆகியோர் முன்னிலையாகினர்.

நாமலின் வழக்கு விசாரணையில் வெளியாகிய அச்சுறுத்தல்! அலி சப்ரியை இலக்குவைத்து நீதிமன்றில் கேள்வி | Threats Emerge During The Hearing Of Namal S Case


கொழும்பு பிரதான நீதவான் போதராகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு, பின்னர் நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படத் தீர்மானிக்கப்பட்டது.



எனினும், பிணை கோரி எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் பல்வேறு வாதங்களை முன்வைத்த போதிலும், பிணை வழங்குவதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என நீதவான் அறிவித்தார்.


இவ்வளவு விடயங்களை முன்வைத்தும் பிணை வழங்கப்படாமை மோசமான நிலைமை என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அலி சப்ரியின் கருத்து

இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் தணுஜா பண்டாரவுக்கும் சட்டத்தரணி அலி சப்ரிக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இதற்கு முன்னைய தினம் அலி சப்ரி ஆற்றிய உரையில், “இன்று இந்த வழக்கில் ஒடுக்குபவர்களாக இருப்பவர்கள், நாளை ஒடுக்கப்படுபவர்களாக மாறக்கூடும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.



இந்தக் கருத்தைச் சுட்டிக்காட்டிய தணுஜா பண்டார, “அலி சப்ரி இவ்வாறு யாரை அச்சுறுத்துகிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.


சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் தற்போது சாட்சிகள் முன்வந்து சாட்சியமளிப்பதாகவும், முன்னர் அச்சம் காரணமாக அவர்கள் சாட்சியமளிக்க முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


எனவே, சந்தேகநபர்களை விடுவிப்பது மிகவும் ஆபத்தானது எனவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

விலங்குகளை காக்க 6 வயதில் தனி இயக்கம்; உலக நாடுகளை உற்று நோக்க வைத்த 12 வயது சிறுவன்… | Makkal Osai

Next Post

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வரலாறு படைக்கும் தமிழ் நூல்: ‘ஷார்ஜாவின் சிற்பி’ புத்தக வெளியீட்டு விழா | Sharjah International Book Fair: First Tamil Book On Sharjah Ruler To Be Released

Next Post
ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வரலாறு படைக்கும் தமிழ் நூல்: ‘ஷார்ஜாவின் சிற்பி’ புத்தக வெளியீட்டு விழா | Sharjah International Book Fair: First Tamil Book On Sharjah Ruler To Be Released

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வரலாறு படைக்கும் தமிழ் நூல்: 'ஷார்ஜாவின் சிற்பி' புத்தக வெளியீட்டு விழா | Sharjah International Book Fair: First Tamil Book On Sharjah Ruler To Be Released

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin