சிறுதானிய சாகுபடி மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்படுவது குறித்துநாமக்கல் மாவட்ட வேளாண் அலுவலர் அறிவித்துள்ளார்.
சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் கலந்துகொண்டு, தொகுப்பு நிதி பெற்று, தொழில் துவங்கி பயன்பெறலாம்.
இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று சான்று பெற்ற, நாமக்கல் வேளாண் அலுவலர் (சிறுதானியங்கள்) சவுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, சிறுதானியங்கள் என்பது எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும், வறட்சி மற்றும் பூச்சி நோய்களைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும். சோளம், கம்பு, ராகி ஆகியவை நன்கு பிரபலமான சிறுதானிய பயிர்களாகவும், தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகிய பயிர்கள் குறுந்தானியப் பயிர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1958ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் துவக்கப்பட்டு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்துடன் 1966ஆம்ஆண்டு இணைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு முதல் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனமாக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையிலான தொழில்நுட்பங்களை கண்டறிந்து அதனை செயல்படுத்திடச் செய்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். சிறுதானியங்கள் சாகுபடியினை புதிய தொழில்நுட்பங்கள் மூலம் எளிமையாக்குவது, பின்செய் நேர்த்தி, மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரித்தல் மூலம் சந்தைப்படுத்துதலை அதிகப்படுத்தி வணிக ரீதியான லாபத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகள் இந்த அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிறுவனத்தில் நியூட்ரி ஹப் மூலம் கீழ்காணும் பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புதியதாக தொழில் தொடங்கவும், அக்ரி ஸ்டார்அப் ஆரம்பித்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளைய சமுதாயத்தினரும், ஸ்டார்ட்அப் ஆரம்பிக்க இருப்போருக்கும், ஏற்கனவே சிறுதானியங்கள் தொடர்பான வியாபாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் செய்து வருவோரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தொடக்க நிலையில் தொழில் தொடங்க உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையிலான தொகுப்பு நிதி வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
இதையும் வாசிக்க: வள்ளி கும்மியாட்டத்தை கண்டு ரசித்த குட்டி முருகன்…
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது பொருட்களை விற்பதற்கும், பொருளாதார மேம்பாடு அடைவதற்கும், வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் ரூ.25 லட்சம் வரை தொகுப்பு நிதி பெறலாம். இப்பயிற்சி, ஸ்டார்ட் அப் துவங்க உள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாதந்தோறும் பிரதி நான்காவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஒரு நாள் நடைபெறும் இப்பயிற்சிக்கு கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.
ஸ்டார்ட் அப் இக்னீசன் என்னும் பயிற்சியில் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் உற்பத்தி, அறுவடை, அறுவடை பின் செய் நேர்த்தி தொழில்நுட்பங்கள் அதற்கு பயன்படுத்தக் கூடிய இயந்திரங்கள், அவற்றை கொள்முதல் செய்தல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துதல் பற்றிய விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது.
குக்கிங் வித் மில்லட்ஸ் என்ற பயிற்சி ஒவ்வொரு மாதமும் பிரதி இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வழங்கப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.2 ஆயிரம். சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தற்போது நம்மிடையே மாறிவரும் நாகரீக வாழ்வியல் முறையில், சிறுதானியங்கள் பயன்படுத்துதல் குறைவாகவே உள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
சிறுதானியங்களை பயன்படுத்தி, தோசை, இட்லி, உப்புமா, பிஸ்கட்ஸ், கேக் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி இல்லத்தரசிகள், உணவு நிறுவனங்களில் பணியாற்றுவோர் மற்றும் தொழில் நடத்துவோருக்கு வழங்கப்படுகிறது. எனவே சிறுதானிய தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் விவசாயிகள் இப்பயிற்சிகளில் பங்கு கொண்டு தொகுப்பு நிதியினை பெற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தை 04024599382 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
