Last Updated:
நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையில் வரும் நாட்களிலும் முட்டை விலை மேலும் குறையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.00 ஆக இருந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு திடீரென 20 காசுகள் குறைத்து ரூ.4.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 21ஆம் தேதி ரூ.5.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக நுகர்வு குறைந்து வருவதால் நாமக்கல் மண்டலத்தில் நேற்று 15 காசும், இன்று 20 காசுகள் என இரு நாட்களில் 35 காசுகள் முட்டை விலை குறைந்துள்ளது.
வட மாநிலங்களில் ஜூலை மாதம் சிரவண மாதம் என்னும் புனிதமான மாதமாகக் கருதப்படுவதால் பக்தர்கள் விரதம் இருப்பதால் முட்டையின் நுகர்வு குறைந்துள்ளது.
மேலும் பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைந்து வருகிறது. வரும் நாட்களிலும் முட்டை விலை குறையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Namakkal,Tamil Nadu
July 24, 2025 4:58 PM IST


