Last Updated:
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
கட்சி தொண்டர்கள் தன்னை ‘மன்னர்’ என அழைத்தபோது, ‘மன்னர்’ என்ற கருத்துக்கே தான் எதிரானவர் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கட்சிப் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் சாடினார்.
குறிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, “குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 100 தொகுதிகள் வரை முறைகேடு நடந்திருக்கலாம் எனவும், அடுத்த ஓரிரு நாட்களில் இதற்கான ஆதாரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோது, ‘ராஜா’ என்றால் அவர் ராகுல் போலதான் இருக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது, தன்னை ராஜா என அழைக்க வேண்டாம் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
Delhi,Delhi,Delhi
August 03, 2025 7:07 AM IST


