இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000 டாலர்) சம்பள வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டு மேலாண்மையில் பட்டம் பெற்ற டேனியல் மின் என்ற இளைஞர் தனது 21-வது வயதிலேயே “க்ளூலி’ (cluely) என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக (CMO) பணியில் சேர்ந்தார்.
மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பும், கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைத்ததால் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார். 21 வயதில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைப்பதுதான் சாதனை எனவும் நம்பியுள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே இடைவிடாத வேலைப் பளுவும், அந்தப் பதவியின் அழுத்தமும் அவரைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.

