Last Updated:
ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரரான க்ளென் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலியாவுக்காக 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைகளை வெல்ல உதவிய க்ளென் மேக்ஸ்வெல், கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.
இதுவரை 149 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள அவர், 126.7 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3,990 ரன்களை விளாசியுள்ளார். இதில் 23 அரைசதங்களும் அடங்கும். கடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக காலில் காயம் ஏற்பட்ட போதிலும் 201 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது மேக்ஸ்வெல்லின் சிறந்த ஆட்டமாக இருக்கும்.
பந்துவீச்சிலும், மேக்ஸ்வெல் சராசரியாக ஒரு ஓவருக்கு 5.46 ரன்களை மட்டுமே கொடுத்து 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து அறிவித்த மேக்ஸ்வெல், 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை தனது உடல் ஒருநாள் போட்டிகளில் ஒத்துழைக்காது என்றும், தான் அணியில் இருப்பது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவுதான் என்று கூறி, ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தற்போது, 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையை வெற்றி பெறும் இலக்குடன் இருப்பதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
June 02, 2025 12:21 PM IST


