Last Updated:
சிஎஸ்கேவின் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கேவின் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில், முதல் முறையாக, ஒரே சீசனில் நடைபெறும் இரண்டு ஆட்டங்களிலும் சிஎஸ்கேவை வீழ்த்தி பெங்களூரு அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்த நிலையில், சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டிக்குப் பிறகு பேட்டியளித்த சிஎஸ்கே கேப்டன் தோனி, இந்த சீசனில் பேட்டிங் பந்துவீச்சு என எதுவுமே சரியாக அமையவில்லை என தெரிவித்தார். மேலும் நெருக்கடியான நேரத்தில் போதிய ரன்களை தாம் குவிக்கவில்லை ஒப்புக்கொண்ட தோனி, இன்னும் தான் அதிரடியான ஷாட்களை விளையாடி கடைசி நேரத்தில் அழுத்தத்தை குறைத்திருக்கலாம் என தெரிவித்தார். மேலும் சிஎஸ்கே வீரர்கள் யார்கர் வகை பந்துகளை இன்னும் அதிகம் பழக வேண்டும் என கூறினார்.
சென்னை அணி வீரர்கள் எப்படி பந்துவீசினாலும், ரொமாரியோ ஷெப்பர்ட் சிறப்பாக செயல்பட்டார். மேலும் பதிரானா யார்கர் பந்துகளை சிறப்பாக வீச வேண்டும். ஒருவேளை அவரால் யார்க்கர் பந்து வீச முடியவில்லையென்றால், பவுன்சர்கள் வீச முயற்சி செய்யலாம். பேட்ஸ்மேன்களும் என்ன பந்து வீசுவார் என தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம். யார்க்கர்கள் மட்டுமே வீசி, அதையும் சரியான லைனில் வீசவில்லை என்றால், பேட்ஸ்மேன்கள் அதில் அதிக ரன்களை எடுப்பர் என கூறினார்.
ஐபிஎல் போட்டிகளில் வழக்கமாக வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாத தோனி, தற்போது தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
Bangalore,Karnataka


