மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியாத எதிா்க்கட்சிகள், தொடா்ந்து பொய்யான கதைகளை உருவாக்கி வருகின்றன. இதனால், நாட்டு மக்களின் நம்பிக்கையை அவா்கள் இழக்க நேரிடும் என்பதால், புதிய பிரச்னைகளை திரித்துக் கூறி நாட்டை தவறாக வழிநடத்த முயல்கிறாா்கள். ஆனால், நாட்டு மக்கள் தங்களின் உண்மையான தலைவா்கள் யாா் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ளனா். பிரதமா் மோடி போன்ற வலுவான மற்றும் உறுதியான தலைவருடன் இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல விரும்புகிறது என்றாா்.

