Last Updated:
ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், ஆர்.சி.பி. நிர்வாகம் காவல்துறை அனுமதி பெறவில்லை என மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
ஆர்.சி.பி-யின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்.சி.பி. நிர்வாகம் முறையான காவல்துறை அனுமதியை பெறவில்லை என மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
போதிய அவகாசம் வழங்காமல் இந்த நிகழ்ச்சியை ஆர்.சி.பி. நிர்வாகம் ஏற்பாடு செய்ததே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, பெங்களூரு காவல்துறை ஆணையர் தயானந்த், டி.சி.பி. சேகர் தெக்கன்னவர், கூடுதல் ஆணையர் விகாஸ் குமார் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விகாஸ் குமார் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பாயம் இவ்வாறு கூறியுள்ளது.
மேலும், அதே நேரத்தில், விதான் சவுதா-விலும் அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், அதற்கான பாதுகாப்புப் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டதாகவும், அதனால், தேவையான ஏற்பாடு செய்வதற்கு போதிய அவகாசம் காவல்துறைக்கு வழங்கப்படாததே காரணம் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது. விகாஸ் குமாரின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
July 01, 2025 8:10 PM IST