காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காளிமேடு நியாயவிலைக்கடை அருகில் பிரபல ரவுடி வசூல் ராஜா என்பவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரை ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் படுகொலை செய்துவிட்டு இரண்டு பிரிவுகளாக பிரிந்து, நான்கு சந்துகளில் தப்பினர். அதில் ஒருவர் இருசக்கர வாகனத்திலும், மற்றொருவர் ஓடியும் செல்லும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.