தமிழகத்தில் நிலவிய வரலாறு காணாத கோடை வெயிலினாலும், திடீர் மழையினாலும் விவசாயத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், மார்க்கெட்டுகளில் காய்கறி வரத்து குறைந்தது. இதனால் காய்கறிகள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் திண்டுக்கல், காந்தி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.
நாட்டுத்தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று கிலோ 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகின்றது. 200 ரூபாய் வரை விற்பனையான முருங்கைக்காய் இன்று கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இஞ்சி கிலோ ரூ.160, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.45, கேரட் ரூ.50, ஊட்டி பீட்ரூட் ரூ.70, நாட்டு பீட்ரூட் ரூ.30, பச்சை மிளகாய் ரூ.70, வெண்டைக்காய் ரூ.25, கத்தரிக்காய் ரூ.30, பாகற்காய் ரூ.70, புடலங்காய் ரூ.30, மாங்காய் ரூ.40 , முருங்கைக்காய் ரூ.70, உருளைக்கிழங்கு ரூ.40, பூண்டு ரூ.250, காலிஃப்ளவர் ரூ.50க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: சாலைகளில் மரங்களை முறித்துப் போட்ட யானைகள்… திருமலை நம்பி கோவிலுக்குச் செல்ல மீண்டும் தடை…
இதுகுறித்து வியாபாரி கணேசன் கூறுகையில், “நான் காந்தி மார்க்கெட்டில் 30 வருடமாக வியாபாரம் பார்த்து வருகிறேன், மழை பாதிப்பால் கடந்த சில நாட்களாகக் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டன. ஆனால் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளன. கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.
சுற்றியுள்ள கிராமங்களில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளியின் விலை குறைந்து காணப்படுகின்றன. ஒரு கிலோ தக்காளி 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகின்றது. அதைப்போல் சின்ன வெங்காயத்தின் விலையும் குறைந்து, ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனையாகின்றது. கிலோ 200 ரூபாய் வரை விற்பனையான முருங்கைக்காயானது இன்று கிலோ 70 ரூபாய் வரை விற்பனையாகின்றது. மேலும் பாகற்காய் மற்றும் பீட்ரூட் வரத்து குறைந்து காணப்படுவதால் அவை இரண்டும் கிலோ 70 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது.
கடந்த மாதத்தில் அதிகமாக முகூர்த்த நாள் இருந்ததால் காய்கறி தேவை அதிகம் இருந்தது. ஆனால் அதனை ஈடுகட்டும் அளவிற்குக் காய்கறி வரத்து இல்லை. அதனால் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டன. ஆனால் தற்போது காய்கறிகள் விலை குறைந்து வருகிறது.
இதையும் படிங்க: உடலுக்கு கேடு தரும் நான் ஸ்டிக் குக்வேர் பாத்திரங்கள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
வரும் நாட்களில் முகூர்த்தத் தினம் அதிகமாக இல்லாததால் காய்கறிகளின் விளையும் குறைந்தே காணப்படும். பருவநிலை மாற்றம் ஏற்படாமல் இருந்தால் இன்னும் சில நாட்கள் காய்கறிகளின் விலை குறைந்தே காணப்படும். தற்போது விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் கட்டுப்படியாகும் வகையில் காய்கறிகளின் விலை விலை நிலவரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
