Last Updated:
2024-25 ஆம் ஆண்டில் பணவீக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சியைப் பொருத்தவரை 16 விழுக்காடு வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மதிப்பு அடிப்படையில் 16 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்த கையேட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 45 லட்சம் கோடியாக அதிகரித்து நாட்டிலேயே முதல் மாநிலமாக இடம்பிடித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் 26 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-25 ஆம் ஆண்டில் 31 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், 2024-25 ஆம் ஆண்டில் பணவீக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சியைப் பொருத்தவரை 16 விழுக்காடு வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
Mumbai,Maharashtra
December 12, 2025 11:16 AM IST
நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்த மாநிலம்… ரிசர்வ் வங்கி பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்!


