Last Updated:
கேரளா மாநிலம் தீவிர வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளியேறியது.
நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரளாவில் தீவிர வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் உருவாக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு தினத்தையொட்டி அம்மாநிலத்தில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது விதி எண் 300-ன் கீழ் முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார். அதன்படி, கேரள மாநிலம் தீவிர வறுமை இல்லாத மாநிலமாக உருவெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
தீவிர வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருப்பது மோசடியானது என்று கூறி காங்கிரஸ் கட்சி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தீவிர வறுமை இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டுவோம் என்று வாக்குறுதியளித்ததாகவும், அதனை தற்போது நிறைவேற்றியிருப்பதாகவும் விளக்கமளித்தார்.
November 01, 2025 3:38 PM IST


