[ad_1]
கோலாலம்பூர்:
மலேசியாவின் பத்து மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று இரவு 7 மணி வரை பலத்த மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பாதகமான வானிலை நாட்டின் பல பிராந்தியங்களை பாதிக்கும் என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கெடாவில் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போக்கோக் சேனா, படாங் தேராப், கூலிம், பண்டார் பஹாரு ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.
பேராக் மாநிலத்தில் கெரியான், லாருட் மாடாங் & செலாமா, கோலா கங்சார், கிந்தா, கம்பார், பாடாங் படாங் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கிளந்தானின் ஜெலி, கோலாக் கிராய், குவா மூசாங் மாவட்டங்களும் பாதிக்கப்படும். திரெங்கானுவில் கோலா நெராஸ், உலு திரெங்கானு, கோலா திரெங்கானு, மாராங், டுங்கூன், கெமாமன் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஹாங்கில் கேமரூன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ், ஜெரான்துட், பெந்தூங், டெமர்லோ, குவாந்தான் ஆகியவையம் இந்த தா வானிலையை எதிர்கொள்ளும் . மேலும், சிலாங்கூரின் உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், நெகிரி செம்பிலானின் ஜெலேபு பகுதிகளும் இந்த மோசமான வானிலையை எதிர்கொள்ள உள்ளன.
சபாவில் சிபிதாங், தெனோம், கோலா பென்யு, பியூஃபோர்ட், நபவான், கெனிங்காவ் போன்ற உட்புற மாவட்டங்கள், மேற்குக் கடற்கரையில் உள்ள பாபர் பகுதியும் எச்சரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
சரவாக்கில் கூச்சிங் (பாவ், கூச்சிங்), செரியான், சமரஹான், பெத்தாங் (சரடோக், கபோங்), சரிகேய், சிபு, முக்கா, பிந்துலு, மிரி, லிம்பாங் ஆகிய இடங்களில் வானிலை மோசமடையும் என்றும் அந்த அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.
இதேபோல், லபுவான் பகுதியும் மாலை வரை நீடிக்கும் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையில் அடங்கியுள்ளது.