கோலாலம்பூர்:
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இன்று (ஏப்ரல் 10) இரவு 7 மணி வரை 11 மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என அது தெரிவித்துள்ளது.
குறித்த வானிலை நிலவும் பகுதிகளாக மலாக்கா, ஜோகூர் மற்றும் கெடா (யான், பெந்தோங், கோலா மூடா, பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு) ஆகியவை அடங்கும்.
மற்றய மாநிலங்கள்: பினாங்கு: செபெராங் பிறை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதி); பேராக்: கெரியன், லாரூட், மாடாங், செலமா, உலு பேராக், கோலக் கங்சார், கிந்தா, கம்பார், பாகன் டத்தோ, ஹிலிர் பேராக், பத்தாங் பாடாங் மற்றும் முஅல்லிம்; கிளாந்தான்: ஜெலி மற்றும் குவா மூசாங்; பகாங்: கேமரன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ் மற்றும் ஜெராந்துட்;
மற்றும் சிலாங்கூர்: கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங்; நெக்ரி செம்பிலான்: போர்ட்டிக்சன், கோலா பிலா, ரெம்பாவ் மற்றும் டாம்பின்; சரவாக்: செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு, முகா, கபிட், மிரி, பெலுரு, தெலாங் உசன், மிரி, மருடி மற்றும் லிம்பாங்; மற்றும் சபா: தவாவில் லஹத் டது மற்றும் சண்டாக்கானில் கினாபடங்கான் ஆகிய இடங்களிலும் இந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.