கோலாலம்பூர்:
இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) இரவு 9 மணி வரை நாட்டின் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.
இந்த வானிலையை எதிர்கொள்ளும் மாநிலங்களாக கிளந்தான் (தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோலா கிராய்) அடங்கும் என்று, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
திரெங்கானு (பெசூட்); பகாங் (பெந்தோங், தெமெர்லோ மற்றும் பெரா); சிலாங்கூர் (உலு சிலாங்கூர்); நெகிரி செம்பிலான் (ஜெலேபு, கோலா பிலா, ரெம்பாவ், ஜெம்போல் மற்றும் தம்பின்); ஜோகூர் (கோத்தா திங்கி)ஆகிய இடங்களும் இந்த வானிலையால் பாதிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்ரீ அமானில் உள்ள பகுதிகளையும் இந்த வானிலை பாதிக்கும், அத்தோடு சரவாக்கில் சரிகேய் (ஜூலாவ் மற்றும் மெராடோங்); கபிட் (பாடல் மற்றும் கபிட்); பிந்துலு (டாடாவ் மற்றும் செபாவ்); மிரி (தெலாங் உசன்) மற்றும் லிம்பாங் என்பனவும் அடங்கும். அத்தோடு சபாவில் (சிபிதாங், கோலா பென்யு மற்றும் பியூஃபோர்ட்) மற்றும் மேற்கு கடற்கரை (பாப்பர், புட்டான், பெனாம்பாங் மற்றும் கோத்தா கினாபாலு) மற்றும் லாபுவானின் கூட்டாட்சிப் பிரதேசங்கள் என்பன இந்த காண மழையால் பாதிக்கப்படும் என்று அது மேலும் கூறியது.




