ஜோகூர் பாரு:
A குழுவில் இன் கீழ் உள்ள ஜோகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்காக 2024-2025 கல்வியாண்டு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி முதல் படிவம் ஆறு வரை உள்ள 1.44 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) தங்கள் பள்ளி அமர்வைத் தொடங்கினர் என்று, கல்வி இயக்குநர் ஜெனரல் அஸ்மான் அட்னான் கூறினார்.
இதில் ஜோகூரில் மட்டும் 602,619 மாணவர்கள் புது ஆண்டுக்கான கற்றல் நடவடிக்கையில் கால் பதித்துள்ளனர்.
A குழுவில் குறித்த நான்கு மாநிலங்கள் உள்ள நிலையில், சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக் மற்றும் கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய மூன்று கூட்டாட்சிப் பகுதிகள் 2024-2025 கல்வியாண்டை நாளை (மார்ச் 11) தொடங்குகின்றன என்று அவர் கூறினார்.
இந்த கல்வியாண்டில் நாடு முழுவதும் சுமார் ஐந்து மில்லியன் மாணவர்கள் தமது கற்கைகளை தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .