இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கொழும்பில் 5 நட்சத்திர விடுதி ஒன்றில், ஆடம்பரமாக திருமண வரவேற்பை கொண்டாடியது இலங்கையில் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது
அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இலங்கையின் மலையகப்பகுதி, கடுமையான வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகளால் சிக்கித் தவிக்கின்ற வேளையில், அவருக்கு ஆடம்பர திருமண வரவேற்பும் , கேளிக்கை கொண்டாட்டங்களும் தேவைதானா என சமூகவலைத்தளங்களில் கிழித்தெடு டுக்கின்றனர்.

ஜீவன் தொண்டைமானை பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவியில் அமர்த்திய மலையக பகுதிதான் இந்த இயற்கை அழிவில், கடுமையான சேதத்தை சந்தித்தது. கண்டி, பதுளை, நுவரெலியா என அங்கு, மொத்தமாக 234 உயிர்கள் பறிக்கப்பட்டன. இது இலங்கையில் மொத்தமாக இறந்த 355 பேரில் பெரும் பகுதியாகும்.
மலையகம் எங்கும் மரண ஓலம்! பசியால் குழந்தைகள் துடிக்கின்றனர்! மண்ணுக்குள் பல வீடுகள் புதையுண்டு மக்கள் வீதியில் நிற்கின்றனர்! பல நாடுகளில் இருந்தும் படையினர் கடுமையாக போராடி மக்களை மீட்டுக்கொண்டுள்ளனர்! உணவையும் தண்ணீரையும் கொண்டு பல உறவுகள் ஓடோடி உதவிக்கொண்டிருக்கின்றனர்! காப்பாற்ற போகும் ஹெலிகாப்டர்கள் விபத்தில் நொறுங்கி உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன! காணாமல் போனவர்களை தேடி கதறி அழும் குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன! நாடே அவசர கால நிலை சட்ட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறது! இன, மத பேதமின்றி உதவி செய்து எல்லோரையும் காப்பாற்றி வருகிறார்கள்! இலங்கை அதிபரே காலத்தில் இருக்கிறார்! இந்த நிலையில் ஜீவன் தொண்டமானின் இந்த ஆடம்பர வெறி வெட்கக்கேடானது என சமூக வலை தளங்களில் பலரும் கடுமையாக் விமர்சித்தனர்.
உங்களை ஆட்சியில் அமரவைத்து அழகுபார்த்த மக்களின் அழுகுரல்கள் உங்களின் காதுகளில் கேட்கவில்லையா? திருமணம் தவிர்க்க முடியாதது. அது கடந்த 23.11.2025 இல் இந்தியாவில் சிறப்பாக நடந்துவிட்டதே! நாடே துன்பத்தில் தவித்துக்கொண்டிருக்க ஏன் இந்த ஆடம்பர கொண்டாட்டம் ? சமூக வலைத்தளம் எங்கும் இலங்கையின் துயரங்கள் பகிர்ந்து கொண்டிருக்க, நீங்கள் மட்டும் எல்லாவற்றையும் மறந்து கேளிக்கைகளையும், ஆடம்பர கொண்டாட்டங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள் என இணையவாசிகள் திட்டித் தீர்த்தனர்.
ஜீவன் தொண்டமான் கடந்த 23.11.2025இல், தமிழ்நாடு, திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்பவருடன் திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். அவருடைய திருமணம் சென்னையின் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அவரது மனைவி மற்றும் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.




