• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | Stray dog case hearing in Supreme Court highlights

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | Stray dog case hearing in Supreme Court highlights
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பொது இடங்​களில் திரி​யும் தெரு நாய்​களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்​பகங்​களில் அடைக்குமாறு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தெரு நாய் மேலாண்மை திட்​டங்களை செயல்​படுத்த 4 வாரங்​களுக்​குள்வழி​காட்டு செயல்​முறை​களை உரு​வாக்​கு​மாறு இந்​திய விலங்​கு​கள் நல வாரி​யத்​துக்​கும் உத்​தர​விடப்பட்​டுள்​ளது.

டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு நாய்​கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டது குறித்து ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகின. நாடு முழு​வதும் இந்த பிரச்​சினை இருப்​ப​தாக பலரும் சமூக வலை​தளங்​களில் கருத்​துகளை பதிவிட்​டனர். இதையடுத்து, உச்ச நீதி​மன்​றமே தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்​தது. ‘விலங்​கு​கள் கருத்​தடை விதி​கள் நாடு முழு​வதும் ஒரே மாதிரி​யாக இருக்​கின்​றன.

அதே​போல, தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் தாக்​கும் இந்த பிரச்​சினை ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் இருக்க வாய்ப்​பு உள்​ளது.எனவே, இந்த வழக்​கில் மாநிலங்​கள், யூனியன் பிரதேச அரசுகள், கால்​நடை பராமரிப்​பு,உள்​ளாட்சி ஆகிய துறை செயலர்​கள் பதில் அளிக்க வேண்​டும். அத்​துடன் விலங்​கு​கள் கருத்​தடை விதி​களை செயல்​படுத்த எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கைகளை அறிந்து கொள்ள வேண்​டும்’ என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி உத்​தர​விட்​டது.

இந்த வழக்​கில் பல மாநிலங்​கள் பதில் அளித்​தன. பதில் மனு தாக்​கல் செய்​யாத மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள், உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படிகடந்த 3-ம் தேதி நேரில் ஆஜராகினர். இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்​றம் நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​களின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தலாக மாறி வரும் தெரு நாய்​கள் பல்வேறு பகுதிகளிலும் குழந்​தைகள், அப்பாவி மக்களை கடித்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதை கருத்​தில் கொண்டு கீழ்க்​கண்ட உத்​தர​ வு​கள் பிறப்​பிக்​கப்​படு​கின்​றன.

  • மாநில, தேசிய நெடுஞ்​சாலைகளில் திரி​யும் தெரு நாய், மாடு போன்ற விலங்​கு​களை மாநக​ராட்​சி, நகராட்சி அமைப்​பு​கள், மாநிலங்​களின் சாலைப் போக்​கு​வரத்து துறை, பொதுப்​பணித் துறை ஆகியவை அப்​புறப்​படுத்த வேண்​டும். இதற்​காக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு நெடுஞ்​சாலைகளில் திரி​யும் நாய்​கள், மாடு​களைக் கண்​டறிந்து அவற்​றைப் பிடித்​துக் கொண்​டு​போய் காப்​பகங்​களில் அடைக்க வேண்​டும். நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசிபோட வேண்டும். காப்பகங்களில் அடைக்​கப்​படும் நாய்​கள், மாடு​கள் ஆகியவை விலங்​கு​கள் நல பாது​காப்​புச் சட்​டத்​தின்​படி பராமரிக்​கப்பட வேண்​டும்.
  • 24 மணிநேர ரோந்துக் குழு: நெடுஞ்​சாலைகளில் திரி​யும் தெரு நாய், மாடு போன்ற விலங்​கு​களை உள்​ளூர் காவல் துறை, கால்​நடை அலு​வலர்​கள், உள்​ளூர் நிர்​வாகங்​கள் உதவி​யுடன் பிடிக்க, 24 மணி நேர​மும்செயல்​படும் நெடுஞ்​சாலை ரோந்​துக் குழுக்​களை உரு​வாக்க வேண்​டும்.
  • நெடுஞ்​சாலைகளில் பயணிப்​போர் தொடர்பு கொள்ள உதவி எண்​களை அறிவிக்க வேண்​டும். இந்த உத்​தர​வை​களை உறு​தி​யாக நடை​முறைப்​படுத்த தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் தலை​வருடன் அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேச தலை​மைச் செயலர்​கள் ஒருங்​கிணைத்து செயல்பட வேண்​டும். உத்​தர​வு​களை செயல்​படுத்​தாத அதி​காரி​களை இதற்கு பொறுப்​பேற்க வைக்க வேண்​டும்.
  • அனைத்து அரசு, தனி​யார் மருத்​து​வ​மனை​களும் ரேபிஸ் தடுப்​பூசி மருந்​துகளை இருப்​பில் வைக்க வேண்​டும். நாய்க்​கடி, அதற்​கான முதலுதவி உள்​ளிட்​டவை குறித்து மாணவர்​கள், ஊழியர்​களுக்கு அனைத்து பள்​ளி​கள், கல்வி நிறு​வனங்​களும் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும்.
  • விளை​யாட்டு அரங்​கங்​களில் தெரு நாய்​கள் நுழைவதை தடுக்க பாது​காவலர்​களை நியமிக்க நிர்​வாகங்​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.
  • ரயில் நிலை​யங்​கள், பேருந்து நிலை​யங்​கள் போன்​றவற்​றில் தெரு நாய்​களின் நடமாட்​டத்தை கட்​டுப்​படுத்​த​வும், தொடர்ந்து ஆய்வு நடத்​த​வும், விலங்​கு​கள் உணவுக் கழிவை தேடி வராமல் இருக்​கும் வகை​யில் திடக்​கழிவு மேலாண்​மையை செயல்​படுத்​த​வும் ரயில்​வே, மாநில போக்​கு​வரத்​துக் கழகங்​கள், நகராட்சி நிர்​வாகங்​களுக்கு உத்​தர​விடப்​படு​கிறது.
  • அரசு, தனி​யார் கல்வி நிறு​வனங்​கள், மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், மருத்​து​வக் கல்​லூரி​கள், விளை​யாட்டு அரங்​கங்​களில் நாய்க்​கடியை தடுப்​பது மற்​றும் தெரு நாய் மேலாண்மை திட்​டங்​களை நாடு முழு​வதும் உள்ள அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் ஒரே மா​திரி​யாக செயல்​படுத்​தும் வகை​யில் நிலை​யான வழி​காட்டு செயல்​முறை​களை இந்​திய விலங்​கு​கள்​ நல வாரி​யம்​ 4 வாரங்​களுக்​குள்​ உரு​வாக்​கி அறிவிக்​க வேண்​டும்​. இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Read More

Previous Post

திண்மக்கழிவு மேலாண்மைக்கு ரூ. 900 மில்லியன் ஒதுக்கீடு

Next Post

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிப்பு: ஜனாதிபதியின் மகிழ்ச்சி தகவல்

Next Post
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிப்பு: ஜனாதிபதியின் மகிழ்ச்சி தகவல்

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிப்பு: ஜனாதிபதியின் மகிழ்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin